தென் ஆப்பிரிக்காவின் காட்டுப் பகுதியில் அரிய வகை ஆடு இனம் 4 கண்கள் மற்றும் 4 கொம்புகளுடன் என பேஸ்புக்கில் ஒரு புகைப்படத் தொகுப்பு பகிரப்பட்டு வருகின்றமை நமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Abdul Majeed Asfar என்ற பேஸ்புக் பக்கத்தில் ”﷽ தென் ஆப்பிரிக்காவின் காட்டுப் பகுதியில் அரிய வகை ஆடு இனம் 4 கண்கள் மற்றும் 4 கொம்புகளுடன்.” என்று இம் மாதம் 25 ஆம திகதி (25.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி மேற்கொண்ட சோதனையின் போது, அது ஒரு விளையாட்டு பொம்மை என கண்டறியப்பட்டது.

Google Search

மேலும் நாம் மேற்கொண்ட சோதனையின் போது, Fuegofatuoart என்ற குறித்த பொம்மையின் வடிவமைப்பாளர் அவரின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்வருமாறு பதிவேற்றம் செய்துள்ளார். ‘’இந்த சிறிய குழந்தை அகெர்பெல்ட்ஸை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். வடக்கு ஸ்பெயினில் உள்ள பாஸ்க் புராணங்களிலிருந்த ஒரு புராண உயிரினம் அகெர்பெல்ட்ஸ். முதலில் ஒரு இயற்கையையும் விலங்குகளையும் பாதுகாப்பவராகக் கருதப்பட்ட, பண்டைய காலங்களிலிருந்து வந்த மந்திரவாதிகள் மற்றும் உடன்படிக்கைகளுடனான அதன் தொடர்பு கிறிஸ்தவ மதத்தை பிசாசுடன் தொடர்புடைய தீய உயிரினங்களாகக் கருதச் செய்தது. நீங்கள் எந்த சிம்போலிசத்தை நம்ப விரும்புகிறீர்கள், இது ஆண்டின் இந்த பயமுறுத்தும் பருவத்திற்கு ஒரு நல்ல உயிரினமாகத் தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கறீர்கள்? ” என 2019 ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 12 ஆம் திகதி பதிவேற்றம் செய்துள்ளார்.

Instagram Link | Archived Link

இதற்கமைய தென் ஆப்பிரிக்காவின் காட்டுப் பகுதியில் அரிய வகை ஆடு இனம் 4 கண்கள் மற்றும் 4 கொம்புகளுடன் என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எங்களின் சிங்கள பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிப்பதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தென் ஆப்பிரிக்காவின் காட்டுப் பகுதியில் அரிய வகை ஆடு இனம் 4 கண்கள் மற்றும் 4 கொம்புகளுடன் என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:4 கண்கள் மற்றும் 4 கொம்புகளுடன் தென் ஆப்பிரிக்காவில் ஆடு கண்டுபிடிப்பா?

Fact Check By: Nelson Mani

Result: False