கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி அன்று (27.12.2019) கஸகஸ்தானில், அல்மட்டி விமான நிலையத்தில் இருந்து 100 பயணிகளுடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் அருகில் இருந்த அடுக்கு மாடி கட்டிடம் மீது மோதி விமானம் விபத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் சில புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link | News link | Archived Link

Thusha Mahendra என்ற பேஸ்புக் கணக்கில் ” விமானம் விபத்து – 100 பயணிகள் நிலை?” என்று செய்தி தலைப்பில் thadam.lk செய்தி இணையத்தளத்தில் வெளியாகிய செய்தியினை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி (27.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பதிவோடு thadam.lk இணையத்தளத்தில் செய்தி லிங்கினையும் இணைத்துள்ளனர்.

குறித்த விமான விபத்து சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறி நிறைய புகைப்படங்கள் பல பேஸ்புக் பக்கங்களிலும் இணையத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளமை காணக்கிடைத்து.

Fact Check (உண்மை அறிவோம்)

இதுதொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள முதலில் குறித்த செய்தி புகைப்படங்களை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

மேற்கொண்ட தேடுதலில் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி (03.08.2016) துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்துடன் தொடர்புடைய புகைப்படம் என்று கண்டறியப்பட்டது.

News link | Archived Link

மேலும் கஸகஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் நாம் மேற்கொண்ட சோதனையில், குறித்த விமான விபத்துடன் தொடர்புடைய செய்திகள் எமக்கு கிடைக்கப்பெற்றன.

News link | Archived Link

News site News linkArchived link
theguardian.comNews linkArchived link
cnn.comNews linkArchived link
france24News linkArchived link

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கஸகஸ்தான் விமான விபத்து தொடர்பாக வெளியான புகைப்படங்கள் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:கஸகஸ்தான் விமான விபத்து வெளியான புகைப்படம் உண்மையா?

Fact Check By: Nelson Mani

Result: Partly False