
INTRO :
இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் விண்வெளி வீராங்கனை பாத்திமா ஷஹ்தா தெரிவு என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” Congratulations!!🤗❤வாழ்த்துக்கள்!!
இலங்கையின் முதல் முஸ்லிம் பெண்
விண்வெளி வீரராக நீர்கொழும்பின்
பாத்திமா ஷஹ்தா தேர்வாகியுள்ளார்!
செயார் செய்து வாழ்த்துங்கள்…
The First Srilankan Muslim Astronaut from
Negombo ( Sailan International College ),
Proud of you dear sister. May allah
Guide in righteous way . May allah
Bless your dreams and allah(swt) is most
For giveness and most merciful. “ என இம் மாதம் 18 ஆம் திகதி (18.08.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் விண்வெளி வீராங்கனை பாத்திமா ஷஹ்தா என பரவும் புகைப்படம் மற்றும் குறித்த பெயரினை கூகுள் தேடு தளத்தில் பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.
அந்த ஆய்வின் போது, பாத்திமா ஷஹ்தா விண்வெளி வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டமைக்கான எவ்விதமான செய்தி அறிக்கையும் எமக்கு கிடைக்கவில்லை. அத்துடன் சமூகவலைத்தளங்களில் தாம் தொடர்பில் பதிவுகளை இடும் பாத்திமா ஷஹ்தா அவ்வாறான எந்தவொரு பதிவினையும் இட்டதாக காணமுடியவில்லை.
தன்னை ஆர்வமுள்ள விண்வெளி வீரராக சமூகவலைத்தளங்களில் அறிமுகம் செய்துள்ளமையும் எம்மால் காணமுடிந்தது.
பாத்திமா ஷஹ்தா மார்ஸ் ஜெனரேஷன் (Mars Generation) போன்ற திட்டங்களில் தீவிரமாக உள்ளார்.
இது விண்வெளி தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொறியியல் போன்றவற்றைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிக்கிறது. ஷஹ்தா தனது பள்ளிப் பருவத்திலிருந்தே விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்களுடன் பல்வேறு சங்கங்களை உருவாக்கினார்.
Link | Archived
ஷஹ்தா பெண்களிடையே விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அறிவியலை மேம்படுத்துவதற்காக பல்வேறு சங்கங்களை உருவாக்கி, இந்த முயற்சிகளில் செயலில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
வீடியோ
சைலன் இன்டர்நேஷனல் பள்ளியையும் நாங்கள் தொடர்பு கொண்டோம், மேலும் ஷஹ்தா தனது O/L வரை சைலனில் படித்திருப்பதை பள்ளியின் ஆசிரியர் உறுதிப்படுத்தினார்.
வைரலான சமூகவலைத்தள பதிவினை தொடர்ந்து, வரும் நாட்களில் இது தொடர்பான தெளிவுபடுத்தல் வீடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஷஹ்தா பாடசாலைக்கு தெரிவித்துள்ளார் என எமக்கு அவர்கள் உறுதி செய்தனர்.
நாசாவில் விண்வெளி வீரராகவும் ஷஹ்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பல சமூகவலைத்தள பதிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஷஹ்தா என்ற பெயரில் எந்த ஒரு தகவலையும் வழங்கவில்லை.
மேலும், விண்வெளி ஆய்வுகளை ஊக்குவிக்க மாணவர்களுடன் இணைவதற்கு நாசா பல வழிகளைக் கொண்டிருந்தாலும், விண்வெளி ஆய்வுக்காக அவர்கள் நாசாவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அர்த்தமில்லை. நாசாவில் விண்வெளி வீரராக ஆவதற்கு பல அடிப்படைத் தகுதிகள் உள்ளன, ஷஹ்தா குறித்த படிமுறைகளை இன்னும் பூர்த்தி செய்யவில்லை.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு, நாசா நிபுணர்கள் Tynker என்ற திட்டத்துடன் தொடர்புடைய Patch Design Challenge வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர், அதில் இலங்கையைச் சேர்ந்த ஒரு இளம் மாணவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
மேகா விஜேவர்தன அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு குழந்தை, இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நாசா ஸ்பேஸ் ஆப்ஸ் போட்டியில் (NASA Space Apps) பங்கேற்றார்.
சமீபத்தில், விண்வெளி வீராங்கனையாகும் கனவோடு இருக்கும் மற்றொரு இளம்பெணணான சதலி குமாரசின்ஹா என்ற பெண் பற்றிய விவரங்களை ஊடகங்கள் தெரிவித்தன.
அவர் தற்போது Aeronautical Engineering Technology உயர் படிப்பைத் தொடர்கிறார். பாத்திமா ஷஹ்தா போன்று சதலி குமாரசின்ஹாவும் Mars Generation project தனது பங்களிப்பினை வழங்கிய பெண்ணாவார். விண்வெளி ஆய்வுகள் தொடர்பான மற்றொரு இளம் ஆர்வமுள்ள இலங்கைப் பெண் பற்றிய விவரங்கள் இங்கே
இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட விரிவான ஆய்வறிக்கை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் விண்வெளி வீராங்கனையாக பாத்திமா ஷஹ்தா தெரிவா?
Fact Check By: S G PrabuResult: Misleading

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team