ஆப்கானிஸ்தானின் Ariana Afghan Airlines விமானம் Herat நகரிலிருந்து காபூல் நோக்கி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 83 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Madawala News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” ஆப்கானிஸ்தான் விமானம் விபத்து.. 83 பேர் வரை உயிரிழப்பு. ” என்று நேற்று (28.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள முதலில் நாம் கூகுளில் afghanistan plane crash என்று தேடிய போது,

இதன் போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ விமானமே விபத்திற்குள்ளாகி இருந்தமை உறுதி செய்யப்பட்டது.

மேலும் நாம் மேற்கொண்ட தேடலின் போது, ஆப்கானிஸ்தானின் விபத்திற்குள்ளான Ariana Afghan Airlines விமானசேவையின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தமது விமானம் விபத்திற்குள்ளாகி உள்ளதாக வெளியான செய்திகள் அனைத்தும் போலியானவை என தெரிவித்துள்ளனர்.

Facebook Link | Archived Link

மேலும் CBS News செய்தி சேவையில் குறித்த விமான விபத்து தொடர்பாக வெளியான வீடியோ இணைப்புக்கள்

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் விமானம் விபத்தில் 83 பேர் வரை உயிரிழப்பு என வெளியான செய்திகள் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:ஆப்கானிஸ்தான் விமானம் விபத்து; 83 பேர் வரை உயிரிழப்பா?

Fact Check By: Nelson Mani

Result: False