
INTRO :
இலங்கையில் கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக குரல் கொடுக்க துனிந்த சிங்கள சகோதரர்கள் என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தொகுப்பு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” ஜனாசா எரிப்புக்கு எதிராக குரல் கொடுக்க துனிந்த சிங்கள சகோதரர்களுக்கு நன்றிகள்.
ජනාසා පුළුස්සා දැමීමට එරෙහිව කතා කිරීමට නිර්භීත වූ සිංහල සහෝදරයන්ට ස්තූතියි.
#stopforcedcremations ” என இம் மாதம் 13 ஆம் திகதி (13.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
மக்கள் விடுதலை முன்னணியினால் இவ்வாறான ஓர் விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என அவர்களின் சமூக வலைத்தளங்களை நாம் ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
குறித்த தேலின் போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரினி அமரசூரியாவின் பங்களிப்புடன், “கைதிகள் உட்பட அனைத்து மக்களின் வாழ்க்கை உரிமையையும் பாதுகாக்கவும்!” என்ற தலைப்பில் முற்போக்கு மகளிர் சங்கம் பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.
இது குறித்து நாம் மேலும் ஆராய்ந்தால், சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 தினத்தன்று (10.12.2020) புதிய சிறகுகள் என்ற அமைப்பு உடன் முற்போக்கு மகளிர் ஒன்றியம், உரிமைகளுக்கான பெண்கள் மற்றும் புதிய சிறகுகள் உள்ளிட்ட பிற சிவில் சமூக அமைப்புகளுடன் பாராளுமன்ற சுற்று வட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின் புகைப்படங்களின் தொகுப்பு கீழே, இணைக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத் தொகுப்பை ஆராய்ந்த போது,
” ඉල්ලුවේ PCR ලැබුණේ Bullet ” பல பெண்கள் பதாதைகளுடன் காண முடிந்தது, அவர்களில் ஒருவர் புகைப்படத்தினை போட்டோஷாப் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.
நாம் மேலும் இது குறித்து ஆய்வினை மேற்கொண்ட வேளையில் புதிய சிறகுகள் என்ற அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் கடந்த 10 ஆம் திகதி (10.12.2020) வழங்கிய நேரலையும் காணக்கிடைத்தது.
ஜனாசா எரிப்பிற்கு எதிராக அமைதியான முறையில் நமது எதிர்ப்பினை காட்டும் விதமாக வெள்ளை துணி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் எமக்கு காணக்கிடைத்தது.
அதிலிருந்த சில புகைப்படங்களையும் இணைத்து குறித்த பதிவினை பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கமைய ஜனாசா எரிப்புக்கு எதிராக குரல் கொடுத்தார்கள் ஜே.வி.பி என ஒரு பெண் கைகளில் ஏந்தியுள்ள பதாதையின் புகைப்படத்துடன் ஜனாசா எரிப்புக்கு எதிராக குரல் கொடுக்க துணிந்த சிங்கள சகோதரர்கள் என வெளியான புகைப்படம் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.