INTRO :

பிரான்ஸில் இஸ்லாமிய மத தூதர் முகமது நபி தொடர்பாக கேலி சித்திரத்தை மாணவர்களுக்கு காட்டிய ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயத்தில் நுழைந்த பயங்கரவாதி ஒருவன் உள்ளே இருந்தவர்களை கழுத்தை அறுத்து கொலை செய்தான்.

பிரான்ஸ் அரசின் செயல்பாடு தங்கள் மத உணர்வுக்கு எதிராக உள்ளது என்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் இதன் வெளிபாடாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பிரான்ஸ் பொருட்களைப் புறக்கணித்தும் வருகின்றனர். இந்த நிலையில், பாலைவனத்தில் பிரான்ஸ் பொருட்கள் கழிவாக அப்புறப்படுத்தப்படுகிறது என்று பகிரப்பட்டுள்ளது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Mohamed Rishok JP என்ற பேஸ்புக் கணக்கில் ” மாஸா அல்லாஹ்...

கண்மணி நாயகம்(ஸல்) அவர்களை கார்ட்டூன் வரைந்து இழிவு படுத்திய பிரான்ஸ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை அப்புறப்படுத்தி கழிவுகளாக வீசப்படும் காட்சி......” என இம் மாதம் 01 ஆம் திகதி (01.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த வீடியோவின் ஒரு Screenshot புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

அத்தேடலின் போது, குறித்த காணொளி 2016 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் 80 ஆயிரம் பழுதாகிய கோழி இறைச்சியினை விநியோகத்திற்கு முன்னர் அப்புறப்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டது.

Alriyadh | Archived Link

Almowaten | Archived Link

Youtube | Archived Link

நாம் மேற்கொண்ட தேடலில் பிரான்ஸ் உற்பத்திகளை கழிவுகளாக வீசப்படுகின்றது என தெரிவிக்கப்பட்ட வீடியோ 2016 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் பழுதான 80 ஆயிரம் கோழி இறைச்சிகளை அப்புறப்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பிரான்ஸ் உற்பத்திகளை அரபு நாடுகள் குப்பையில் வீசியதா?

Fact Check By: Nelson Mani

Result: False