
நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவேன் : அர்ஜூன் சம்பத் தெரிவித்ததாகவும் அதற்கு நடிகர் சூர்யா என்னை அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு வழங்க தயார் என தெரிவித்தாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
Life News- தமிழ் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவேன் : அர்ஜூன் சம்பத்
என்னை அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு வழங்க தயார்–சூர்யா.
இந்த வார்த்தையாலயே அர்ஜுன் சம்பத்தை செருப்பால் அடித்துவிட்டார் சூர்யா…
வாழ்த்துக்கள்❤️.” என்று இம் மாதம் 19 ஆம் திகதி (19.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த தகவல் பலராலும் பகிரப்பட்டு வந்துள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த தேடலின் போது, அர்ஜுன் சம்பத் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதியே அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்தான விளக்கத்தினை பதிவேற்றியிருந்தார்.
ஒரு பொய்யான செய்தியை நம்ப வைத்து சூர்யாவரை கொண்டு சென்று பதிலுரைக்கவைத்து இன்னும் அதனை வலைத்தளங்களில் விவாதிக்க வைப்பது
— Arjun Sampath (@imkarjunsampath) September 19, 2020
மாணவ தற்கொலைகளை திமுக ஊக்குவிக்கிறது என்ற மக்கள் கருத்தினை திசை திருப்புவதற்கு தான்
R S பாரதி ஊடகங்கள் மண்டை மீதுள்ள கொண்டையை மறைக்க மறந்து விடுகின்றது
மேலும் நடிகர் சூர்யா தன்னை அடிக்கும் வாய்ப்பினை ஏழைக்குழந்தைக்கு வழங்க தயார் என தெரிவித்திருந்த செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளதா என்று தேடிய வேளையில் அவ்வாறான செய்திகள் எமக்கு எங்கும் கிடைக்கவில்லை.
அவரின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களிலும் இவ்வாறான எவ்விதமான செய்திகளும் வெளியாகி இருக்கவில்லை.
மேலும் எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது, இந்து மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தர்மா என்பவர் நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால், அர்ஜுன் சம்பத், தலைமையில், ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தது.

எமது இந்திய தமிழ் பிரிவினரின் ஆய்வு அறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் மேற்கொண்ட தேடுதலில் அடிப்படையில் இந்து மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தர்மா பேசியதை அர்ஜூன் சம்பத் மற்றும் சூர்யாவை தொடர்புபடுத்தி ஒரு சிலர் வதந்தியை உருவாக்கி, பகிர்ந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு; உண்மை என்ன?
Fact Check By: Nelson ManiResult: Partly False