INTRO :
அமெரிக்க – இந்திய வான்படை பயிற்சிக்கு இலங்கை வான்பரப்பில் அனுமதி மறுப்பு என செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Times Tamil என்ற பேஸ்புக் கணக்கில் “ இந்தியாவின் வேண்டுகோளை திட்டவட்டமாக நிராகரித்த இலங்கை..!! “ என கடந்த மாதம் 27 ஆம் திகதி (27.06.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இது குறித்து நாம் இலங்கை விமானப்படையின் ஊடகப்பேச்சாளரிடம் வினவிய போது, இலங்கை விமானப்படையிடம் இலங்கை வான்பரப்பை பயன்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கைகளும் அண்மைய காலங்களில் இந்தியாவினால் விடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் அமைந்துள்ள இந்திய தூதரமும் இது தொடர்பாக அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளமை காணக்கிடைத்தது.

குறித்த பதிவில் மூன்றாம் நாடொன்றுடன் இணைந்து கூட்டு இராணுவப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் நிராகரித்திருப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்திருந்தனர்.

மேலும் இலங்கையில் நேற்றுடன் அமெரிக்கா,ஐப்பான் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து மேற்கொண்ட கூட்டு பயிற்சி நிறைவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சியானது கடந்த மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

navy.lk| Archived Link

மேலும் இலங்கை விமானப்படையில் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இலங்கையில் இடம்பெற்ற விமான சாகச நிகழ்விற்கு இந்திய விமானப்படையும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

pib.gov.in | Archived Link


நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய இந்திய வான்படை பயிற்சிக்கு இலங்கை வான்பரப்பில் அனுமதி மறுப்பு என்ற செய்தி முற்றிலும் போலியான தகவல் என கண்டறியப்பட்டது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இந்திய வான்படை பயிற்சிக்கு இலங்கை வான்பரப்பில் அனுமதி மறுப்பு?

Fact Check By: Nelson Mani

Result: False