
2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வருடத்துக்கான சிறந்த செய்தி இணையதளத்துக்கான விருது மெட்ரோ நியூஸ் இணைய தளத்திற்கும் வீரகேசரி, விடிவெள்ளி ஆகிய இணையத்தளங்களுக்கு சிறந்த செய்தி இணையத்தளத்துக்கான திறமை சான்றிதழ் விருது கிடைத்ததுள்ளதாக தகவல் பேஸ்புக் பக்கங்களில் செய்தி பரவி வருகின்றன.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
Mahendran Kutty என்ற பேஸ்புக் கணக்கில் வாழ்த்துக்கள் அண்ணா என்ற பதிவோடு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படத்தில் எஸ்.ரமேஸ்குமார்- ஆண்டின் சிறந்த செய்தி இணையத்தளத்துக்கான விருது- மெட்ரோ நியூஸ் இணையத்தளம், வீ.பிரியதர்ஷன்- ஆண்டிக் சிறந்த செய்தி இணையத்துக்கான திறமைச் சான்றிதழ் விருது- வீரகேசரி மற்றும் எஸ்.என்.எம்.சுஹைல் – ஆண்டின் சிறந்த செய்தி இணையத்துக்கான திறமைச் சான்றிதழ் விருது – விடிவெள்ளி இணையத்தளம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காணக்கிடைத்தது.
குறித்த பதிவானது கடந்த 15 ஆம் திகதி (15.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் வீரகேசரி உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் 9 விருதுகளை தனதாக்கிக்கொண்டது எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்… என்ற பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளியில், 2:15 முதல் 2:42 வரையான பகுதியிலும் சிறந்த செய்தி இணையத்தளம் என்றே குறிப்பிடப்பட்டிருந்தமை எமது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த பதிவானது கடந்த 12 ஆம் திகதி (12.12.2019) அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
வீரகேசரி இணையத்தளம்
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் மெட்ரோ நிவூஸ் இணையத்தளம் மற்றும் மெட்ரோ நிவூஸ் பத்திரிகையினை ஆய்விற்கு உட்படுத்திய போது,இம்மாதம் 12 ஆம் திகதி வெளியான (12.12.2019) மெட்ரோ நிவூஸ் பத்திரிக்கையின் முன்பக்கத்திலேயே சிறந்த செய்தி இணையத்தள வடிவமைப்பு விருது மெட்ரோ நியூஸுக்கு என செய்தி வெளியிடப்பட்டிருந்தது காணக்கிடைத்தது.
மேலும் அவர்களின் இணையத்தளத்தில் அவர்களுக்கு கிடைத்த சான்றிதழ் மற்றும் கிண்ணம் காட்சி படுத்தப்பட்டிருந்தது, அதில் சிறந்த செய்தி இணையத்தள வடிவமைப்பு என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
மேலும் விடிவெள்ளி பத்திரிகையினை பரிசோதனை செய்த போது,
மெட்ரோ நிவூஸ் மற்றும் விடிவெள்ளி ஆகிய இரு பத்திரிகையில் மேற்கொண்ட ஆய்வில் வீரகேசரி இணையத்தளம் மற்றும் பத்திரிகையில் சிறந்த செய்தி இணையத்தளம் என்று பிழையான செய்தி வெளியிடப்பட்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் நாம் மேற்கொண்ட சோதனையில் குறித்த விருது வழங்கும் விழாவினை நடத்திய இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் வெளியிட்டிருந்த போட்டி நியதியினை சோதனைக்கு உட்படுத்திய போது, அதில் சிறந்த வடிவமைப்பிற்கான செய்தி இணையத்தளம் என்ற பிரிவிலேயே விருதுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
மேலும் நாம் மேற்கொண்ட தேடுதலில் இலங்கை ஆங்கில அரச பத்திரிகையான Daily News இணையத்தளத்திற்கு குறித்த பரிசளிப்பு விழாவில் சிறந்த வடிவமைப்பிற்கான செய்தி இணையத்தளம் ஆங்கில பிரிவிற்கு கிடைத்துள்ளது.
குறித்த செய்தி அவர்களின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அறிய
வீரகேசரி இணையத்தளத்தில் மற்றும் பத்திரிகையில் சிறந்த செய்தி இணையத்தளம் என்று குறிப்பிடப்பட்டாலும், இலங்கை அரச பத்திரிக்கையான Daily News இணையம் மற்றும் பத்திரிகையில் சிறந்த வடிவமைப்பிற்கான செய்தி இணையத்தளம் என்றே செய்தி வெளியாகியுள்ளது.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், சிறந்த செய்தி இணையத்தளத்திற்காக விருது கிடைத்ததாக வெளியான செய்தி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த விருது சிறந்த வடிவமைப்பிற்கான செய்தி இணையத்தளத்திற்காக வழங்கப்பட்ட விருது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Title:2018 ஆண்டின் சிறந்த செய்தி இணையத்தளத்திற்கான விருது யாருக்கு?
Fact Check By: Nelson ManiResult: Partly False