INTRO :
மேற்கத்திய நாடுகளின் காடுகளில் திடீரென்று நெருப்பு பற்றி எரிய காரணமான பறவை என சமூக வலைத்தளங்கள் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” மேற்கத்திய நாடுகளின் காடுகளில் திடீர் திடீரென்று நெருப்பு பற்றி எரிவது பற்றி பலரும் சந்தேகித்த வண்ணம் இருந்தனர்.

தற்சமயம் இந்த பறவை நெருப்பை கக்குவதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர், அதேசமயம் "நமது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பறவையைப் (அபாபீல்) பற்றி எச்சரித்துள்ளார்கள்" என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

☝️மேற்கத்திய உலகம் இப்பறவை பற்றி இப்போது தெரிந்து கொண்டுள்ளது “ என கடந்த மாதம் 15 ஆம் திகதி (15.11.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் குறித்த வீடியோவிலிருந்து ஒரு screenshot எடுத்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்திய போது, இது Southern Lapwing என்ற ஒரு பறவை என கண்டறியப்பட்டது.

இது தென்னாபிரிக்க கண்டத்தில் வாழும் ஒரு பறவையினம் என எமக்கு அறியக்கிடைத்தது.

ebird.orgI Archived

மேலும் இது குறித்து ஆய்வு செய்த போது, ‘Fabricio Rabachim’ என்ற யூடியுப் சேனல் எமக்கு கிடைக்கப்பெற்றது. குறித்த சேனலில் தற்போது வைரலாகியுள்ள தீ கக்கும் பறவை வீடியோ என்ற வீடியோவும் இதில் காணப்பட்டது.

நாம் குறித்த சேனலினை ஆய்வு செய்த போது, Fabrício Rabachim என்ற நபர் சுயமாக தாம் கற்ற visual effects (VFX) தொழில்நுட்பத்தில் உருவாக்குகின்ற வீடியோக்களை இதில் பதிவேற்றுவதாக அவர் தெரிவித்திருத்துள்ளார்.

இந்த வீடியோ முற்றிலும் visual effects (VFX) பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

குறித்த தேடலின் போது, நெருப்பை கொண்டு தனது இரையினை வேட்டை ஆடும் சில பறவைகள் அவுஸ்ரேலிய காட்டுப்பகுதிகளில் காணப்படுவதாக சில செய்திகள் வெளியாகிருந்தமையும் எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த பறவை இனங்கள் ‘firehawks’ என்று அழைக்கப்படுகின்றன.

nine.com.au I Archive 1 I nationalgeographic.com I Archive 2

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், நபிகள் நாயகம் ஸல் 1400 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த நெருப்பை கக்கும் பறவை என பகிரப்படும் வீடியோவில் உள்ள பறவை visual effects (VFX) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ என்றும் உலகில் இதுவரை அவ்வாறு நெருப்பை கக்கும் பறவை இனம் கண்டறியப்படவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எமது மலையாள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:நபிகள் நாயகம் ஸல் 1400 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த நெருப்பை கக்கும் பறவையா இது?

Fact Check By: S G Prabu

Result: False