இத்தாலி தேவாலயம் ஒன்றில் மனிதனை உருவத்துடன் தோற்றமளிக்கும் விநோத பறவை வந்ததாக ஒரு வீடியோ பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Dias Bro என்ற பேஸ்புக் கணக்கில் ” இத்தாலி தேவாலயத்தில் தோன்றிய அபூர்வ பறவை என சித்தரிக்கப்படுகின்றது. இது உண்மையாகின் சாத்தானின் வருகை எனலாம்...” என்று இம்மாதம் 26 ஆம் திகதி (26.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில் செய்தோம், குறித்த வீடியோவில் “JJPD Producciones” என்ற பெயரை கூகுளில் தேடினோம்.

குறித்த பெயரில் ஒரு யூடியுப் அலைவரிசை காணப்பட்டது. அதை நாம் ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

அதன் யூடியூப் பக்கத்தை பார்த்தபோது, வீடியோ ஸ்பெஷல் எஃபெக்ட் செய்யும் நிறுவனம் என்பதும், பேய், கற்பனை காட்சிகள் கொண்ட குறும்படங்கள், பயங்கரமான அமானுஷ்ய கதைகளை வீடியோவாக எடுக்கும் நிறுவனம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அவர்கள் வெளியிட்ட வீடியோக்கள், ஃபேஸ்புக் வீடியோக்களை எல்லாம் பார்க்கும்போது அமானுஷ்ய உருவங்களை வைத்து எப்படி வீடியோ எடுப்பது என்ற வகையிலேயே இருந்தன.

மேலும் மேற்கொண்ட தேடலின் போது கடந்த வருடம் ஜுன் மாதம் 2 அம் திகதி (02.06.2019) Demonio Aterroriza en Ciudad de Granada - Nicaragua 2019 - Gargola? என்ற தலைப்பில் (கிரனாடா நகரத்தில் அரக்கன் பயமுறுத்துகிறது - நிகரகுவா 2019 - கர்கோலா?- தமிழ் மொழியாக்கம்) ஒரு காணொளி பதிவேற்றம் செய்திருந்தனர்.

அதிலிருந்த வீடியோவை தற்போது இத்தாலி தேவாலயத்தில் வினோத பறவை என்று பகிர்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.

மேலும் தேவாலயத்தின் மீது அரக்கன் அமர்ந்திருக்கும் வீடியோ எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற வீடியோவையும் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி (08.09.2019) வெளியிட்டிருந்தனர்.

அவர்கள் வீடியோவில் பதிவிட்டுள்ளவாறு நிகரகுவா என்ற இடத்தில் கர்கோலா என்ற ஆலயம் உள்ளதா? என்று நாம் மேற்கொண்ட தேடுதலில் குறித்த தேவாலயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

link

ஏற்கனவே இது குறித்த எமது இந்திய பிரிவின் தமிழ் குழு மேற்கொண்ட உண்மை தேடல் பரிசோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில் இருந்து கிடைத்த ஆதாரங்களின்படி தேவாலயம் இத்தாலியில் இல்லை, நிகரகுவாவில் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த வீடியோ கிராஃபிக்ஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், இத்தாலியில் தேவாலயத்தின் மீது விநோத பறவை தென்பட்டது என்று பகிரப்படும் வீடியோ தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இத்தாலியில் தேவாலயத்தின் மீது விநோத பறவை தென்பட்டது என்று பகிரப்படும் வீடியோ தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Avatar

Title:இத்தாலி தேவாலயத்தில் விநோத பறவை!- உண்மை என்ன?

Fact Check By: Nelson Mani

Result: False