
உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் 2019-ல் அச்சிடப்பட்டுள்ளது, என்று ஒரு செய்தி பரவுவதை கண்டோம்.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Qk News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 2020 ல் வந்த #கோரோனோ வைரஸ் எப்படி 2019 ல் தயாரித்த டெட்டால் கம்பெனிக்கு தெரிந்தது??? எய்ட்ஸ், கேன்சர் வரிசையில், #உலக_கார்பரேட்டுகளால் திட்டமிட்டு பரப்பப்படுகிறதா கொரோனோ வைரஸ்.?” என்று இம்மாதம் 17 ஆம் திகதி (17.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
உலக வரலாற்றினை பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் ஒன்றும் புதிதல்ல. இது 1960 ஆம் ஆண்டிலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நோய் ஆகும். ஆயினும் தற்போது பரவுகின்ற கோவிட்-19 என்ற வைரஸ் புதிதாக கடந்த வருடம் டிசம்பர் மாதமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wikipedia Link | Archived Link
உலகிற்கு பரிச்சயமான பலவகையான கொரோனா வைரஸ் இருப்பினும் தற்போது சீனாவில் இருந்து 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவ துவங்கிய கோவிட் 19 (COVID 19) அல்லது Novel Coronavirus (nCoV2019) என்று அழைக்கப்படும் வைரஸ் முற்றிலும் வேறுபட்ட வைரஸ் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது பரவி வரும் COVID 19 ரக வைரஸை டெட்டால் மருந்தால் அழிக்க முடியாது என்றும் இதற்கு முந்தைய கொரோனா வைரஸ் மட்டுமே அழிக்க முடியும் என்றும் டெட்டால் தயாரிப்பாளர் ஏற்கனவே தமது கருத்தினை பதிவேற்றம் செய்துள்ளார்.

தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ஆனது முந்தைய கொரோனாவை விட மிகவும் ஆபத்தானதாகும்.
குறித்த டெட்டால் பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ், இதற்கு முன்பே கண்டறியப்பட்டு மனிதர்களுக்கு தொற்றும் கொரோனா வைரஸினை மட்டுமே அழிக்கும்.
தற்போது பரவிவருகின்ற novel Coronavirus (nCoV 2019) அல்லது COVID 19 என்ற வைரஸ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் என்பதால் மக்களுக்கு இந்த வேறுபாடு சரியாக புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது. இதனால், டெட்டால் மருந்து பாட்டிலை சுட்டிக்காட்டி சிலர் தவறான தகவலை சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர் என்று தெளிவாகிறது.
மேலும், டெட்டால் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் novel Coronavirus (nCoV 2019) அல்லது COVID 19 அழிக்கக் கூடிய வகையான எவ்வித கண்டுபிடிப்பும் விற்பனையில் இன்னும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி மேலும் விரிவாக படிக்க WHO வெளியிட்டுள்ள கட்டுரை லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்யவும்.

மேலும் இதுகுறித்து எமது இந்திய கிளையின் தமிழ் பிரிவினர், மேற்கொண்ட ஆய்வில் குறித்த தகவல் போலியானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தியினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், டெட்டால் பாட்டிலில் 2019-ல் அச்சிடப்பட்ட கொரோனா வைரஸ் என்ற பெயர் தற்போது வந்துள்ள covid-19 என்ற புதிய வைரஸ்க்கும் சம்பந்தம் இல்லை என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Title:டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் 2019-ல் அச்சிடப்பட்டதா?
Fact Check By: Nelson ManiResult: False