இலங்கையருக்கு விசா இன்றி கனடா வருவதற்கு பாராளுமன்றத்தில் அனுமதிக்குமாறு கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே உத்தரவிட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

தகவலின் விவரம்:

குறித்த செய்தியில் இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு❗

இலங்கையர்கள் வீசா இன்றி கனாடவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே அந்நாட்டு நாடாளுமன்றிற்கு உத்தரவிட்டுள்ளார்.

வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், பணி அனுமதி (வேர்க் பேர்மிட்) வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள குடியேற்றத் திட்டத்தின் பிரகாரம் பணி மற்றும் குடியேற்றத் திட்டங்களின் அடிப்படையில் கனடாவில் வீசா பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் இலங்கையின் பங்களிப்பு காத்திரமானதாக அமைந்துள்ளது என பிரதமர் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
கனடாவின் அபிவிருத்தியில், இலங்கைச் சகோதர சகோதரிகளின் பங்களிப்பினை மலினப்படுத்திவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தமான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த அனைத்து இலங்கையர்களுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கனடாவில் தொழில் வாய்ப்பு ஒன்றை உறுதி செய்து கொண்டு அங்கு செல்வதற்கு விண்ணப்பம் செய்ய முடியும் எனவும், சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களில் பயணம் செய்வோர் வீசா இன்றி 90 நாட்கள் வரையில் கனடாவில் தங்கியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொழில் வாய்ப்புக்கள் அடுத்த வாரம் இணையத்தில் பிரசூரிக்கப்படும் எனவும் சுமார் ஆறு மில்லியன் தொழில்வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leo News | Archived Link

Lanka Sun News | Archived

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த செய்தி கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தர்ப்பத்திலும் இலங்கையர்களுக்கு கனடாவுக்கு விசா இன்றி அனுமதி என்ற செய்தி பகிரப்பட்டு வந்துள்ளது. அதற்கு இலங்கைக்கான கனடா தூதரகம் குறித்த செய்தியினை மறுத்ததோடு, போலியான செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என்றும் அறிவிப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Twitter Link | Archived Link

இது குறித்து மேலும் ஆய்வு மேற்கொண்டவேளையில் பிபிசி தமிழ் என்ற செய்தி இணையத்தளம் மேற்கொண்ட ஆய்வில் அடிப்படையிலும் குறித்த செய்தி பொய்யாக பகிரப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. முழு அறிக்கை

தற்போது மீண்டும் கனடா வீசா தொடர்பாக பரப்பப்படும் தகவலின் உண்மை தன்மை தொடர்பாக கனடா தூதகரத்தினை தொடர்பு கொண்டவேளையில் குறித்த செய்தியில் எவ்வித உண்மை தன்மையும் இல்லையெனவும், கனடா வீசா தொடர்பான அனைத்து விடயங்களும் அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டனர்.

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இலங்கையர்களுக்கு விசா இன்றி கனடா செல்ல அனுமதி என்ற செய்தி முற்றிலும் பொய்யானது என உறுதி செய்யப்படுகிறது.

Avatar

Title:இலங்கையருக்கு விசா இன்றி கனடா வர அனுமதியா…?

Fact Check By: Nelson Mani

Result: False