
உலக மக்களை பயமுறுத்தும் கொரோனா வைரஸ் தொடர்பாக பல போலியான பதிவுகள் பேஸ்புக் மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை நமது குழுவின் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது.
அதேபோன்று மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரை நாயை விட கேவலமாக பிடிக்கிறார்கள் என ஒரு காணொளி பகிரப்பட்டு வருவதை நாம் அவதானித்தோம்.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Batti Express என்ற பேஸ்புக் பக்கத்தில் ” நாயை விட கேவலமாக பிடிக்கிறார்கள் கொரோன நோய் பாதிக்கப்பட்டவரை சீனாவில் பாருங்க” என்று இம்மாதம் 24 ஆம் திகதி (24.02.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவில் ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் குறித்த வீடியோவை நன்றாக கூர்ந்து கவனித்தால் 1 நிமிடம் 21 ஆம் செக்கன்களிலிருந்து 1 நிமிடம் 23 ஆம் செக்கன்கள் வரையான கால இடைவெளியில் ஒரு banner எமது கண்களுக்கு தென்பட்டது.
குறித்த banner இல் EXERCISE என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

நாம் குறித்த EXERCISE மற்றும் குறித்த வீடியோவிலிருந்த அதிகாரிகளின் சட்டையில் பொறிக்கப்பட்டிருந்த swat என்ற இரண்டையும் ஒன்றாக்கி EXERCISE swat என்று கூகுளில் தேடியவேளையில் The Telegraph யூடியுப் அலைவரிசையில் குறித்த வீடியோ காணக்கிடைத்தது.

சீனாவிலுள்ள டோங்பாயில் மற்றும் ஹெனான் உள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகளை எவ்வாறு எதிர் கொள்ளுவது என்பது தொடர்பாக தங்களை தயார்படுத்துவதற்கான பயிற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்று எமது ஆய்விலிருந்து தெரியவருகிறது.

மேலும் நாம் மேற்கொண்ட சோதனையில்,

குறித்த காணொளி தொடர்பாக இணையத்தளங்களில் வெளியாகியிருந்த செய்திகள் எமக்கு கிடைக்கப்பெற்றன.
sky news | News Link | Archived Link |
globalnews.ca | News Link | Archived Link |
aol.co.uk | News Link | Archived Link |
இவை அனைத்திலும் குறித்த காணொளி அதிகாரிகள் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், சீனாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரை நாயை விட கேவலமாக பிடிக்கிறார்கள், என்று சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோ போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Title:சீனாவில் நாயை விட கேவலமாக பிடிக்கிறார்களா கொரோனா நோய் பாதிக்கப்பட்டவரை?
Fact Check By: Nelson ManiResult: False