INTRO :
யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒரு புகைப்படத்துடன் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

I Like Jaffna என்ற பேஸ்புக் கணக்கில் யாழில் வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை..!!! “ என கடந்த மாதம் 29 ஆம் திகதி (29.06.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பான புகைப்படம் ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதிவேற்றியதன் பின்னர் இது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியது.

மேலும் இது குறித்து யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பதிவிட்ட டுவிட்டர் பதிவில் குறித்த புகைப்படத்தில் இருப்பவர் அக்கரைப்பற்றை சேர்ந்த மொஹமட் முஸ்தப்பா மொஹமட் ஹனிபா எனும் இஸ்லாமியர். இவர் குடந்தனை பகுதியினை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து அங்கு வசிப்பவர் எனவும் இவர் ய்து அங்கு வசிப்பவர் எனவும் இவர் NEM construction-ல் பணிபுரிபவர் எனவும் தெரிவித்துள்ளார்.



twitter.com | Archived Link

குறித்த நபரை சந்தித்த Yarl Voice என்ற பேஸ்புக் பக்கத்தில் அவரை நேர்காணல் எடுத்த வீடியோவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

நாம் மேலும் இதனை உறுதி செய்துகொள்ள NEM construction நிறுவனத்தினை தொடர்புகொண்டு வினவிய போது, அவர்கள் நிறுவனத்தில் சீனர்கள் பணியாற்ற வில்லை என தெரிவித்துள்ளதோடு, அவர்கள் சீன பிரஜைகளை வேலைக்கு அமர்த்துவதில்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும் சுமந்திரன் குறித்த டுவிட்டினை நீக்கியுள்ளதோடு, அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார். மேலும் இதனை பகிர வேண்டாம் என வேண்டுக்கோள் விடுத்துள்ளமை காணக்கிடைத்தது.

twitter.com| Archived Link

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், யாழில் வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை என்று பகிரப்பட்ட புகைப்படமானது போலியான தகவல் என கண்டறியப்பட்டது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:யாழில் வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜையா?

Fact Check By: Nelson Mani

Result: False