INTRO :
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசையின் பயன்படுத்தப்படும் நிறப்பட்டைகள் குறித்து ஒரு பதிவு இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Karudan News என்ற பேஸ்புக் பக்கத்தில் தெரிந்துக்கொள்வோம்.....

கவர்ச்சிகரமான விளம்பரங்கள், பற்பசையின் நிறம், சுவை, மணம், அழகான வெளித்தோற்றம் ஆகியவற்றைப் பார்த்து #பற்பசை வாங்குவது நம் வழக்கமாகிவிட்டது. ஆனால், அதில் என்னென்ன மூலப்பொருட்கள் உள்ளன, அவை நம் பற்களுக்கு உகந்தவையா, என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் யாரும் கவனிப்பதில்லை.

#மூலப்பொருட்கள்

பற்பசைகளில் வேம்பு, கிராம்பு (இலவங்கம்) போன்ற இயற்கைப் பொருட்களும், கூடவே நுரை ஏற்படுத்தவும், நறுமணத்துக்காவும், சுவைக்காகவும், நிறத்தை அளிக்கவும், நீண்ட காலம் கெடாமலிருக்கவும் எனப் பல்வேறு இரசாயனப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, பற்பசை வாங்கும்போது அதில் என்னென்ன மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை படித்துப் பார்த்து வாங்க வேண்டும்.

உங்கள் பற்பசை மடக்கு குழாயின் (collapsible tube) அடியில் குறிக்கப்பட்டு இருக்கும்

#நிறப்பட்டைகளை நீங்கள் அவதானித்ததுண்டா?

சிலர் இந்த நிறக்கோடுகளை அந்தந்த நிறுவனங்களின் குறியீடுகள் என கருதுவதுண்டு. ஆனால் அது தவறு. ஒவ்வொரு நிறக் கோடுகளுக்குள்ளும் ஒவ்வொரு தகவல் மாயமாக மறைந்துள்ளது. அவை என்னவென்று நாமும் அறிந்து கொள்வோம்.

பெரும்பாலும் இவை நான்கு நிறங்களால் காண்பிக்கப் பெற்றிருக்கும்.

அவை 🟩பச்சை, 🟦நீலம், 🟥சிவப்பு மற்றும் ⬛கறுப்பு.

இது பற்பசைகளில் மட்டுமன்றி அனைத்து மருத்துவ களிம்புகளிலும் குறிக்கப்பெற்றிருக்கும்.

குறித்த பொருட்கள் எதன் மூலம் உருவாக்கப்பெற்றுள்ளன என்பதையே இவை குறித்து காட்டுகின்றன.

🟩 பச்சை நிறப் பட்டை: பற்பசை #முழுக்க #முழுக்க_இயற்கைப் #பொருட்களால் தயாரிக்கப்பட்டது.

🟦 நீல நிறப் பட்டை: பற்பசையில் இயற்கைப் பொருட்களுடன் #சில_இரசாயனங்களும் கலக்கப்பட்டிருக்கின்றன.

🟥 சிவப்பு நிறப் பட்டை: இயற்கைப் பொருட்களுடன், #அதிக_அளவில் #இரசாயனப்_பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

⬛ கறுப்பு நிறப் பட்டை: #முழுமையாக #இரசாயனப்_பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டது” என இம் மாதம் 21 ஆம் திகதி (21.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த புகைப்படம் பலராலும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இது குறித்து நாம் கூகுள் தளத்தில் தேடிய போது, குளோகாட் நிறுவனத்தினால் இது குறித்து ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த நிறப்பட்டையானது,அவர்களின் உற்பத்தி செய்கையின் போது இயந்திரங்களுக்கு எவ்விடத்தில் அதை சீல் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக அவ்வாறான நிறப்பட்டைகள் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

colgate.com | Archived link

பற்பசை தயாரிப்பு இடத்தில் இருந்த வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றது. அதில் இயந்திரங்கள் குறித்த நிறப்பட்டையினை பயன்படுத்தி பற்பசை நிரப்பப்பட்டதும், அவற்றை சீல் செய்கின்றமை காணக்கிடைக்கின்றது.

எமது தேடலுக்கு அமைய குறித்த நிறப்பட்டையானது, “eye marks” or “color marks,” என தயாரிப்பு துறையில் பயன்படுத்தப்படும் ஒரு குறியிடாகும். இது தயாரிப்பு இயந்திரங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டளைகளுக்கு இணங்க செயல்பட உதவுகின்றமை எம்மால் கண்டறியப்பட்டுள்ளது.

consolidatedlabel.com| Archived link

opmgroup.co.uk | Archived link

நாம் மேற்கொண்ட தேடலில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுக்கு அமைய, இது தயாரிப்பு துறையில் பயன்படுத்தப்படும் ஒரு குறியீடாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பற்பசைகளில் நிறப்பட்டைகள் எதை குறிக்கின்றது தெரியுமா?

Fact Check By: Nelson Mani

Result: False