INTRO :
காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு அருகே வருவதால் இன்று இரவு தொலைபேசிகளை உபயோகிக்க வேண்டாம் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பல வருடங்களாக பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” இன்று இரவு செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்! எச்சரிக்கை. உலக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை. இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு வெகு நெருக்கமாக கடப்பதால், இன்றிரவு 12.30 தொடக்கம், 3.30 வரை உங்கள் செல்போன்களை off செய்து வையுங்கள். போன்களை உங்கள் உடம்புக்கு பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம். அவை பயங்கரமான சேதத்தை உண்டுபண்ணும் எனவும், ஏனென்றால் மேற்குறிப்பிட்ட அந்த நேரத்தில் கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கும் என்றும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் NASA செய்தி அறிவித்துள்ளது. உடனடியாக பகிர்ந்து உங்கள் உறவுகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்க “ என பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நமது குழுவினர் முதலில் காஸ்மிக் கதிர் வீச்சு தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, காஸ்மிக் கதிர் அல்லது அண்டக் கதிர் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாது. அண்டத்திலிருந்து வருவதால் அதற்கு அண்டக் கதிர் என்று பொதுவான பெயர் சூட்டியுள்ளனர். இது அதிக கதிர்வீச்சு தன்மை கொண்டது. தினம் தினம் பூமியை நோக்கி காஸ்மிக் கதிர் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், நம்முடைய பூமியின் வளிமண்டலத்தில் உள்ள பாதுகாப்பு கவசம் காஸ்மிக் கதிர் வீச்சை தடுத்து பூமியை காக்கிறது என்று தகவல் கிடைத்தது.

esa.int I Archive

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு ஆய்வறிக்கையில் விண்வெளியில் கதிர்வீச்சு 700 மடங்கு அதிகமாக இருக்கிறது.

அதுவே பூமிக்கு மிக அருகில் அதாவது சர்வதேச விண்வெளி நிலையம் பகுதியில் 250 மடங்காக இருக்கும். விமானம் பறக்கும் உயரத்தில் 40 மடங்காக இருக்கும், உயர்ந்த மலை சிகரங்கள் பகுதியில் 2 மடங்காக இருக்கும், சமதளத்தில் அது ஒரு மடங்காக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதன் மூலம் விண்வெளியில் எப்போதும் காஸ்மிக் கதிர்வீச்சு இருந்துகொண்டே இருப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

காஸ்மிக் கதிர் வீச்சு தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு

What are Cosmic Rays | astro.fnal.gov | earthdata.nasa.gov

இந்த செய்தியானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் வைரலாகி வருகின்றமை எம்மால் காணக்கிடைத்தது. 2014 ஆம் ஆண்டு இது பொய்யான தகவல் என வெளியான செய்தி அறிக்கையும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

news.abs-cbn.com I Archived

மேலும் நாம் மேற்கொண்ட தேடலின் போது, 2011 ஆம் ஆண்டு oneindia.com தமிழ் இணையத்தளத்தில் இந்த செய்தி போலியானது, இதனை நம்ப வேண்டாம் என வெளியான செய்தியும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

கனா நாட்டில் 2010 ஆம் ஆண்டு குறித்த செய்தியால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தி அறிக்கையும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

Ghana text hoax predicting earthquake prompts panic

காஸ்மிக் கதிர் இன்று பூமியை கடப்பதால் செல்போன் பாதிக்கப்படும் என்று பரவும் வதந்தி!

FACT CHECK : කොස්මික් කිරණ බලපෑම සම්බන්ධයෙන් පළවූ ව්‍යාජ සටහනක්

உண்மையற்ற தகவலினை யாரோ ஒருவர் உருவாக்கி பகிர அதனை சற்றும் சிந்திக்காமல் பலர் பகிர்ந்து வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பெப்ரவரி மாதம் என பகிரப்படும் தகவலில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:காஸ்மிக் கதிர் இன்று பூமியை கடப்பதால் தொலைப்பேசி பாதிக்கப்பா ; உண்மை தெரியுமா?

Fact Check By: S G Prabu

Result: False