INTRO :
கொரோனா வைரஸ் அல்ல அது பாக்டீரியா எனவும் 5ஜி கதிர்வீச்சினால் மக்கள் இறக்கின்றனர் என இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Mohamed A Roshan என்ற பேஸ்புக் கணக்கில் ” BREAKING NEWS

உலகின் மிகப்பெரிய செய்தி!

இறந்த கொரோனா நோயாளியின் பிரேத பரிசோதனை இத்தாலியில் செய்யப்பட்டது, ஒரு பெரிய வெளிப்பாடு ஏற்பட்டது.

கோவிட் -19 க்குப் பிறகு இறந்த உடலில் பிரேத பரிசோதனை செய்த முதல் நாடு இத்தாலி ஆனது, மேலும் முழுமையான விசாரணையின் பின்னர் கோவிட் -19 ஒரு வைரஸாக இல்லை, ஆனால் மிகப் பெரிய நாடு என்று கண்டறியப்பட்டது.

இது உலகளாவிய ஊழல்.

இது உலகளாவிய ஊழல்.

இது உலகளாவிய ஊழல்.

மக்கள் உண்மையில் "பெருக்கப்பட்ட உலகளாவிய 5 ஜி மின்காந்த கதிர்வீச்சு (விஷம்)" யால் இறக்கின்றனர்.

கொரோனா வைரஸால் இறந்தவர்களின் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்காத உலக சுகாதார அமைப்பு (WHO) சட்டத்தை இத்தாலியில் மருத்துவர்கள் மீறியுள்ளனர்.

இது ஒரு வைரஸ் அல்ல, ஆனால் மரணத்தை உண்டாக்கும் ஒரு பாக்டீரியம், இது நரம்புகளில் இரத்த உறைவுக்கு காரணமாகிறது, இது நரம்புகள் மற்றும் நரம்புகளில் இரத்தம் உறைவதற்கு காரணமாகிறது, இதனால் நோயாளி இறக்க நேரிடும்.

இத்தாலி வைரஸைத் தோற்கடித்தது, "ஃபெலியா-இன்ட்ராவாஸ்குலர் கோகுலேஷன் (த்ரோம்போசிஸ்) தவிர வேறு எந்த சிகிச்சையும் இல்லை."

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மாத்திரைகள்

மற்றும் அழற்சி எதிர்ப்பு

ஆக்ஸிஜனேற்றிகளை (ஆஸ்பிரின்) எடுத்துக்கொள்வது அதை குணப்படுத்தும்.

கோவிட் -19 வைரஸிலிருந்து உடல்களின் பிரேத பரிசோதனை (பிரேத பரிசோதனை) மூலம் இத்தாலிய மருத்துவர்கள் இந்த நோயை குணப்படுத்த பரிந்துரைக்கின்றனர்.

வேறு சில இத்தாலிய விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, வென்டிலேட்டர்கள் மற்றும் ஒரு தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) ஒருபோதும் தேவையில்லை. இதற்கான நெறிமுறைகள் இப்போது இத்தாலியில் வழங்கப்பட்டுள்ளன.

சீனா ஏற்கனவே இதை அறிந்திருந்தது, ஆனால் அறிக்கையை வெளியிடவில்லை.

இந்த தகவலை உங்கள் குடும்பத்தினர், அயலவர்கள், அறிமுகமானவர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இதனால் அவர்கள் கோவிட் -19 இன் பயத்தை போக்க முடியும்,

மேலும் இது ஒரு வைரஸ் அல்ல, ஆனால் 5 ஜி கதிர்வீச்சுக்கு வெளிப்படும் ஒரு பாக்டீரியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இது தீங்கு விளைவிப்பதே இதற்குக் காரணம்.

இந்த கதிர்வீச்சு வீக்கம் மற்றும் ஹைபோக்ஸியாவையும் ஏற்படுத்துகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பிரின் -100 மி.கி மற்றும் அப்ரோனிக்ஸ் அல்லது பாராசிட்டமால் 650 மி.கி. ஏன்… ??? CO.

உலக சுகாதார அமைப்பு நெறிமுறையை மீறி கோவிட் -19 ஆல் கொல்லப்பட்ட உடல்கள் மீது இத்தாலியில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

மருத்துவர்கள் உடலின் கைகள், கால்கள் மற்றும் பிற பாகங்களைத் திறந்து சரியாக பரிசோதித்தபின், இரத்த நாளங்கள் நீண்டு, நரம்புகளில் த்ரோம்பி நிரப்பப்படுவதைக் கவனித்தனர்.

இது பொதுவாக இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இது உடலுக்கு ஆக்ஸிஜனின் ஓட்டத்தை குறைக்கிறது மற்றும் நோயாளி இறக்க காரணமாகிறது. இந்த ஆராய்ச்சியை அறிந்ததும், இத்தாலிய சுகாதார அமைச்சகம் கோவிட் -19 சிகிச்சை நெறிமுறையை மாற்றி, நேர்மறை நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் வழங்கியது.

100 மி.கி, எம்பிரோமேக்ஸ் கொடுக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, நோயாளிகள் குணமடையத் தொடங்கினர் மற்றும் அவர்களின் உடல்நலம் மேம்படத் தொடங்கியது.

இத்தாலிய சுகாதார அமைச்சகம் ஒரு நாளைக்கு 14,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளை வெளியேற்றி திருப்பி அனுப்புகிறது.

ஆதாரம்: இத்தாலிய சுகாதார அமைச்சகம்” என கடந்த மாதம் 17 ஆம் திகதி (17.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த தகவல் பலராலும் பல வருடங்களாக இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலில் நாம் உலக சுகாதார அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் ஆய்வினை மேற்கொண்ட போது, அதில் கொரோனா வைரஸ் தான் என்றும் அது பாக்டீரியாவால் பரவல் அடையவில்லை என தெளிவாக குறிப்பிட்டுள்ள பதிவும் காணொளியொன்றும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

www.who.int | Archived Link

மேலும் Antibiotics இனால் கொரோனா வைரஸினை தடுக்க இயலாது என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளமையும் காணக்கிடைத்தது. பாக்டீரியாவிற்கு எதிராகவே Antibiotics வேலையாற்றும் என்றும் வைரஸினை அது கட்டுப்படுத்தாது எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

www.who.int| Archived Link

மேலும் இந்த பதிவில் ஃபெலியா-இன்ட்ராவாஸ்குலர் கோகுலேஷன் (த்ரோம்போசிஸ்) என்ற சிகிச்கை முறையினை பற்றி அறிவித்துள்ளனர். அது தொடர்பாக நாம் மேற்கொண்ட தேடலின் போது, இத்தாலி நாட்டில் இயங்கும் ஒரு உண்மை கண்டறியும் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் அது பொய்யான கூற்று என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

animalpolitico.com| Archived Link

மேலும் 5G கதிர்வீச்சி மூலம் கொரோனா வைரஸ் பரவல் அடையாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளனர்.

www.who.int| Archived Link

எமது தேடலுக்கு அமைய, கொரோனா வைரஸ் அல்ல அது பாக்டீரியா எனவும் 5 ஜி அலைவரிசை தொடர்பாகவும் பரவுகின்ற செய்தி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கொரோனா ஒரு வைரஸ் அல்ல; அது பாக்டீரியாவா?

Fact Check By: Nelson Mani

Result: False