இறந்தவர்கள் புதைத்த பின்னர் குறித்த உடலை சாப்பிடக்கூடிய மிருகம் என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

புங்குடுதீவு என்ற பேஸ்புக் பக்கத்தில் “இந்த விலங்கின் பெயர் கபர்பிஜீ. இது பூமிக்கு அடியில் வாழ்கிறது...

புதைக்கின்ற மனிதஉடல் உட்பட அனைத்து உடலையும் சாப்பிடக்கூடிய மிருகம்தான் இது..

இரவுகளில் மனித ஓலம் கேட்பதாக சிலர் மிரண்டு வந்திருப்பர்...

அது பேய் அல்ல இந்த மிருகம்தான் அது என கண்டுபிடித்திருக்கிறார்கள்.” என்று இம்மாதம் 25 ஆம் திகதி (25.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த பதிவேற்றத்தில் வீடியோ ஒன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் குறித்த வீடியோவை செவிமடுத்தோம். அதில் அவர் குறித்த விலங்கின் பெயரை

அலிகேட்டர் ஸ்னாப்பிங் (Alligator Snapping) என தெரிவிக்கின்றார்.

நாம் Alligator Snapping என கூகுளில் தேடுதல் நடத்தினோம்.

குறித்து இந்த தேடலின் போது, அலிகேட்டர் ஸ்னாப்பிங் (Alligator Snapping) என்ற ஆமை இனம் பற்றிய ஒரு காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றது.

குறித்த வீடியோவில் அலிகேட்டர் ஸ்னாப்பிங் மற்றும் சதாரானமான ஸ்னாப்பிங் ஆகிய இரு ஆமைகள் பற்றி விளக்கப்படுத்தப்பட்டுள்ளது.

Youtube Link

மேலும் இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, வீடியோ தலைப்பில் பதியப்பட்ட கபர்பிஜீ என்ற விலங்கினை குறித்து கூகுளில் தேடினோம்.

அப்போது Google Images இல் காணப்பட்ட கபர்பிஜீ என்ற விலங்கின் புகைப்படமும் வித்தியாசமாக இருந்தது.

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், புதைக்கின்ற மனித உடலை சாப்பிடும் மிருகம் கபர்பிஜீ என்று இணையத்தில் பரவும் வீடியோ போலியானது, என்று ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:புதைக்கின்ற மனித உடலை சாப்பிடும் மிருகமா கபர் பிஜீ?

Fact Check By: Nelson Mani

Result: False