823 வருடத்திற்கு ஒருமுறை வரும் டிசம்பர் மாதம் இது உண்மை என்ன?

False சமூகம் | Society

இந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதத்தில் 5 சனி, 5 ஞாயிறு மற்றும் 5 திங்கள் இருப்பதாகவும், இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் என ஒரு பதிவு பேஸ்புக் தளத்தில் வட்டமிட்டு வருகின்றது.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 

Philip Jphilip  என்ற பேஸ்புக் கணக்கில் ” டிசம்பர் காலண்டர்.

(உங்கள் வாழ்க்கையில் இந்த நிகழ்வை நீங்கள் காணும் ஒரே நேரம் இதுதான்)

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 5 சனி, 5 ஞாயிறு மற்றும் 5 திங்கள் இருக்கும். இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும். சீனர்கள் இதை “BAG FULL OF MONEY” என்று அழைக்கிறார்கள். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள், 4 நாட்களுக்குள் பணம் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

சீன ஃபெங் சுய் அடிப்படையில், இந்த செய்தியை அனுப்பாதவர் இந்த சிறந்த வாய்ப்பை இழக்க நேரிடும் … நான் என் பங்கைச் செய்கிறேன், உங்களுக்கு ஒருபோதும் தெரியாது!” என்று கடந்த மாதம் 23 ஆம் திகதி (23.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கலண்டரினை பார்வையிட்டோம்.

Link

குறித்த தேடலின் போது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும் 5 சனிக்கிழமை, 5 ஞாயிற்றுகிழமை மற்றும் 5 திங்கட்கிழமையை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதை உறுதி செய்ய 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கலண்டரினை பரிசோதனை செய்தோம், அதில் 4 சனிக்கிழமை, 4 ஞாயிற்றுகிழமை மற்றும் 4 திங்கட்கிழமையை மாத்திரமே காணப்பட்டது.

நாம் மேற்கொண்ட தேடுதலில் 2012,2018,2019,2023 ஆகிய வருடங்களில் டிசம்பர் மாதத்தில் 5 சனிக்கிழமை, 5 ஞாயிற்றுகிழமை மற்றும் 5 திங்கட்கிழமையை கொண்டுள்ளது. ஆனால், 2020ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 4 சனிக்கிழமை, 4 ஞாயிற்றுகிழமை மற்றும் 4 திங்கட்கிழமையை மட்டுமே கொண்டுள்ளது.

எனவே 823 வருடங்களுக்கு ஒரு முறை வருகின்ற டிசம்பர் மாதம் இது என்ற தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், 823 வருடத்திற்கு ஒருமுறை வரும் டிசம்பர் மாதம் என பேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் போலியானது என உறுதிசெய்யப்பட்டுள்ளது 

Avatar

Title:823 வருடத்திற்கு ஒருமுறை வரும் டிசம்பர் மாதம் இது உண்மை என்ன?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *