101 வயதில் தனது முதலாவது குழந்தையை பெற்றெடுத்த தாய் என்று ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

90 - Acre News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 101 வயதில் தனது முதலாவது (ஆண்) பிள்ளையை பெற்றெடுத்த தாய் !!!! அல்லாஹு அஃக்பர்

நிச்சயமாக பிறப்பின் உ௫வாக்கம் மனிதனிடத்தில் கிடையாது. அதற்கு காலமும் கிடையாது, வயதும் கிடையாது !!!” என்று மே மாதம் 19 ஆம் திகதி (19.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலை உண்மை தன்மையினை கண்டறிவதற்கு புகைப்படத்தினை google reverse image tool ஐ பயன்படுத்தி தேடுதலில் ஈடுப்பட்டோம்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி abcnews-ல் வெளியான செய்தியில் பூட்டி தனது கொள்ளுப் பேத்தியினை அவர்கள் இறக்கும் முன் கையில் ஏந்தியிருந்த புகைப்படம் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில், பாட்டியின் மரணம் தொடர்பாக ஊடகங்களுக்கு சாரா கூறுகையில், “என்னுடைய பாட்டி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடியவர். நிறையக் கதைகள் சொல்வார். என்னுடைய மகள் பிறந்து இரண்டு வாரங்கள் ஆனபோது இந்த படம் எடுக்கப்பட்டது. அன்றைக்குத்தான் பாட்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இருந்தார். அதுதான் சரியான தருணமாக இருக்கும் என்பதால் கொள்ளு பேத்தியைப் பார்க்க வைத்தோம். நாங்கள் வெளியிட்டிருந்த புகைப்படத் தொகுப்பில் ஐந்து தலைமுறையினர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் அடக்கம்” என்று இருந்தது.

இதற்கமைய 101 வயதில் தனது முதலாவது பிள்ளையை பெற்றெடுத்த தாய் என பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 101 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த தாய் என பகிரப்படும் தகவல் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:101 வயதில் முதல் குழந்தையை பெற்ற தாய்; உண்மை என்ன?

Fact Check By: Nelson Mani

Result: False