
INTRO :
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பிரதிநிதியிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் வரைப்படத்தினை வழங்கியவாறு உள்ள புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இது போலியான புகைப்படம் என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில் ” மனதில் தோன்றியதை, எழுதுகின்றேன் இலங்கையை சீனாவிடம்,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் கையளிக்கும் தருணம்
ரனிலும் மைத்திரியும் MCC ECTA என அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நாட்டை கையளித்த போது நீ எல்லாம் எங்கடா இருந்தாய்..?
பொண்டாட்டிட சீலையில் ஒழிந்து கொண்ட இருந்தாய்..?” என இம்மாதம் 13 ஆம் திகதி (13.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படத்தினை நாம் சற்று உற்று நோக்கியபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்று சீன பிரதிநிதியின் கைகளில் சில பாகங்கள் எடிட் செய்துள்ளமை காணக்கிடைத்தது.

நாம் மேலும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஆய்வினை மேற்கொண்டபோது, இம்மாதம் 9 ஆம் திகதி (09.10.2020) சீன பிரதிநிதியான Yang Jiechi உடனான சந்திப்பு தொடர்பாக பகிரப்பட்ட செய்தி மற்றும் புகைப்படம் தொகுப்பு எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த புகைப்படம் தொகுப்பினை நாம் ஆய்வு செய்தபோது, இலங்கை புகைப்படத்தினை சீன பிரதிநிதியிடம் கையளித்த பிரதமர் என பகிரப்படும் புகைப்படத்தினை ஒத்த ஒரு புகைப்படம் எமக்கு காணக்கிடைத்தது.
அதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன பிரதிநிதி Yang Jiechi உரையாடலில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பிரதமர் சீன பிரதிநிதியிடம் கையளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

குறித்த புகைப்படத்தினை எடிட் செய்து இலங்கை புகைப்படத்தினை கையளிப்பதை போன்று வடிவமைத்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு தொடர்பாக அததெரண தொலைக்காட்சியில் வெளியாகியிருந்த செய்தி வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எமது சிங்கள பிரிவினர் இது குறித்து மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
நாம் மேற்கொண்ட தேடுதலின் அடிப்படையில் இலங்கையில் புகைப்படத்தினை சீன பிரதிநிதியிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கையளிக்கவில்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Title:சீன பிரதிநிதியிடம் இலங்கை புகைப்படத்தினை கையளித்தாரா மஹிந்த?
Fact Check By: Nelson ManiResult: Altered