
பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா இல்லை எனவும் அவர் குணமடைந்துள்ளதாகவும் பேஸ்புக்கில் பரவும் செய்தி குறித்து எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Virakesari என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் எஸ்.பி.பி” இன்று (24.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டுள்ளமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு ஆய்வினை மேற்கொண்ட போது, குறித்த செய்தி பதியப்பட்ட சில மணி நேரத்திற்குள் செய்தியில் மாற்றம் செய்துள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

Virakesari link | Archived link
உண்மை என்னவெனில், எஸ்பிபிக்கு கொரோனா நெகடிவ் என செய்தி பரவ தொடங்கிய சில மணி நேரத்திலேயே, அவரது மகன் எஸ்பிபி சரண் மறுப்பு தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா இல்லை என்று வெளியானது வதந்தி. தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்பிபி சரண்#SPB #SPBalasubramaniam #SPBCharan @charanproducer pic.twitter.com/1w8lZRr1PK
— Jaya TV (@JayaTvOfficial) August 24, 2020
குறித்த காணொளி பகிரப்பட்டதன் பின்னர் பதிவேற்றம் செய்யப்பட்ட செய்திகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை எமக்கு காணக்கிடைத்துள்ளது.
வீரகேசரி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெளிவின்மை காணப்படுகின்றது.
அத்துடன் குறித்த செய்தி தற்போது அவர்களின் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

Virakesari Link | Archived Link
மேலும் சில இணையத்தளங்கள் முன்னர் செய்தி வெளியிட்டு அதன் பின்னர் செய்தியில் மாற்றங்களை மேற்கொண்டு புதிதாக செய்திகள் வெளியிட்டுள்ளமை எமது ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

அதேசமயம், எஸ்பிபி சரண் கூறியதன் பேரிலேயே, தான் ட்வீட் வெளியிட்டதாகக் கூறிய பிஆர்ஓ நிகில் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
Singer SPB’s son Charan denies previous message sent by his PR that SPB is fine & has tested negative
— J Sam Daniel Stalin (@jsamdaniel) August 24, 2020
PR sources say it was shared with Charan’s consent & approval
Charan on a video:
Regardless of COVID results dad’s status still the same
Dad is on life support & ECMO
அதற்கமைய எமக்கு கிடைத்த ஆதரங்களின் அடிப்படையில், எஸ்பிபிக்கு கொரோனா நெகடிவ் என பரவிய தகவலை அவரது மகனே தவறு என்று மறுத்துள்ளார்.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.