INTRO :
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தாய்லாந்து சுகாதார அமைச்சர் அழுததாக ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Mohemad Fawzan என்ற பேஸ்புக் கணக்கில் ” புற்றுநோய் என்பது ஒரு நோய் அல்ல, மயக்க மருந்து! ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஓஷ் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் புற்றுநோயியல் நிபுணர். புற்றுநோய் ஒரு கொடிய நோய் அல்ல, ஆனால் மக்கள் அலட்சியத்தால் மட்டுமே இறக்கின்றனர் என்று குப்தா பிரசாத் ரெட்டி (பி.வி) கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, இரண்டு முறைகளை மட்டுமே பின்பற்றினால் புற்றுநோயை அகற்ற முடியும். முறைகள்: -

1_ முதலில் அனைத்து வகையான சர்க்கரை உணவையும் விட்டு விடுங்கள். ஏனெனில், உங்கள் உடலில் சர்க்கரை கிடைக்காவிட்டால், புற்றுநோய் செல்கள் இயற்கையாகவோ அல்லது இயற்கையாகவோ இறந்து விடும்.

2. பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை கலக்கவும். இந்த எலுமிச்சையுடன் கலந்த வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் காலையில் 3 மணிக்கு சாப்பிடுவதற்கு முன் குடிக்கவும். புற்றுநோய் நீங்கும்.

மேரிலாந்து மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில், இது கீமோதெரபியை விட ஆயிரம் மடங்கு சிறந்தது என்று கண்டறியப்பட்டது.

3. தினமும் காலையிலும் இரவிலும் மூன்று தேக்கரண்டி கரிம தேங்காய் எண்ணெயை சாப்பிட்டால் அது புற்றுநோயை குணப்படுத்தும்.

நீரிழிவு நோயைத் தவிர்த்து பின்வரும் இரண்டு சிகிச்சையில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். புற்றுநோயால் உங்களை காயப்படுத்த முடியாது. இருப்பினும், அலட்சியம் அல்லது அலட்சியம் என்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை.

புற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க என்பதை நினைவில் கொள்க. குப்தா பிரசாத் கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு வழிகளில் இந்த தகவல்களை பரப்புகிறார்.

அனைவருக்கும் தெரிந்துகொள்ள வாய்ப்பு அளிக்க தகவல்களை பரப்ப வேண்டும் என்று கேட்டார்.

அவர், "நான் என் வேலையைச் செய்தேன். இப்போது உங்கள் வேலையைச் செய்து உங்களைச் சுற்றியுள்ளவர்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்றுங்கள்! புற்றுநோயியல் நிபுணர் குப்தா பிரசாத் ரெட்டி ஒரு மருத்துவர் மட்டுமல்ல, ஒரு மேசியாவும் கூட!" என இம் மாதம் 03 ஆம் திகதி (03.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த தகவல் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலில் நாம் குப்தா பிரசாத் ரெட்டி குறித்து இணையத்தில் தேடியபோது, அவ்வாறான பெயரில் யாரும் எமக்கு கிடைக்கவில்லை. மேலும் குறித்த பேஸ்புக் பதிப்பில் உள்ள ஓஷ் மாநில மருத்துவ பல்கலைக்கழகம் குறித்து தேடிய போது, அது கிர்கிஸ்தானில் அமைந்துள்ள ஒரு பல்கலைகழகம் என கண்டறியப்பட்டது.

அதற்கமைய பகிரப்படும் பேஸ்புக் பதிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, இது ரஷ்யாவில் அமைந்துள்ள பல்கலைகழகம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  1. சர்க்கரை உணவு

சர்க்கரை உணவை விட்டு விட்டால் புற்றுநோய் செல்கள் இயற்கையாகவே இறந்து விடும் என்று குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் இது குறித்து கூகுளில் தேடிய போது, புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஐக்கிய ராஜ்யம் அமைப்பு வெளிட்டிருந்த ஆய்வறிக்கையில், சர்க்கரையினை குறைப்பதால் புற்றுநோயினை அழிக்க முடியாது என அறிவித்துள்ளது.

cancerresearchuk.org | Archived Link

அவுஸ்ரேலிய நாட்டின் புற்றுநோய் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரியான பேராசிரியர் சாஞ்சியா அரண்டா abc செய்தி சேவை பிரிவிற்கு வழங்கிய நேர்காணலில், புற்றுநோய் செல்களுக்கு சர்க்கரை கிடைப்பதை நிறுத்துவது உடலின் ஆரோக்கியமான செல்களுக்கு தேவையான குளுக்கோஸினை கிடைக்க செய்யாமைக்கு சமன் என தெரிவித்துள்ளார்.

www.abc.net.au | Archived Link

  1. சூடான எலுமிச்சை நீரைக் குடிப்பதால் புற்றுநோயைத் தடுக்க முடியுமா?

வாஷிங்டனில் அமைந்துள்ள தேசிய சுகாதார ஆராய்ச்சி மையத்தின் கரோலின் நோவாஸ் அவர்களால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கைக்கு அமைய ‘எலுமிச்சை அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிரான நிரூபிக்கப்பட்ட தீர்வு’ மற்றும் ‘எலுமிச்சை கீமோதெரபியை விட 10,000 மடங்கு வலிமையானவை’ என்ற கூற்றுக்கள் நிச்சயமாக தவறானவை என தெரிவித்துள்ளார்.

http://www.center4research.org/| Archived Link

  1. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 3 ஸ்பூன் கரிம தேங்காய் எண்ணெய் குடிப்பதால் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?

இது குறித்து நாம் கூகுளில் தேடியபோது, எவ்விதமான ஆதாரங்களும் எமக்கு கிடைக்கவில்லை. The Harvard School of Public Health என்ற இணையத்தளத்தில் வெளியாகியிருந்த ஒரு ஆய்வறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றது. அதில் விற்பனைக்கு தயாரிக்கப்படுகின்ற தேங்காய் எண்ணெய் இல் சில இரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றதாக தெரிவித்துள்ளனர்.

www.hsph.harvard.edu | Archived Link

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய புற்றுநோய் குறித்து குப்தா பிரசாத் ரெட்டி தெரிவித்ததாக வெளியான செய்தி முற்றிலும் போலியான தகவல் என கண்டறியப்பட்டது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:புற்றுநோய் குறித்து குப்தா பிரசாத் ரெட்டி தெரிவித்தது உண்மையா?

Fact Check By: Nelson Mani

Result: False