
INTRO :
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Sasidaran Sasidaran என்ற பேஸ்புக் கணக்கில் “ 225 அதி சொகுசு வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன இப்போ நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி பெறவில்லையா? ஊர்ந்துவிட்டதோ………“ என இம் மாதம் 05 ஆம் திகதி (05.09.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதனை பலரும் உண்மை என நினைத்து பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வு செய்த போது, அரபு மற்றும் ஜப்பான் மொழியில் பல கார் விற்பனை நிறுவனத்தின் பேஸ்புக் பக்கங்களில் குறித்த புகைப்படம் காணப்பட்டது.

தொடர்ந்து இந்த புகைப்படத்தினை பகிர்ந்திருந்த வாகன விற்பனை நிறுவனத்தின் பேஸ்புக் பக்கங்களை நாம் தொடர்புக்கொண்டு இது குறித்து விசாரித்தமைக்கு எமக்கு இதுவரையில் எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை.
பலரும் இந்த புகைப்படம் زانيارى ئۆتۆمبێل Zanyari Automobile என்ற பேஸ்புக் பக்கத்திலிருந்து பகிரந்துள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. அக்குறித்த புகைப்படத்தினை நாம் ஆய்வு செய்த போது, வாகனத்தினை இடது பக்கத்தில் செலுத்தும் விதமாக இது அமைந்திருந்தமை எம்மால் காணக்கிடைத்தது. இலங்கையில் வலது பக்கத்தில் தான் வாகனம் செலுத்துவர். எனவே, ஓட்டுநர் இருக்கை வலது புறம்தான் அனைத்து நான்கு சக்கர வாகனங்களிலும் அமைந்திருக்கும்.

இந்தப் புகைப்படத்தை பிற புகைப்படத் தொகுப்புகளிலும் நாங்கள் கண்டோம். Link 1 | Link 2
மேலும், அமைச்சர்களின் வாகனங்கள் இறக்குமதி செய்வது தொடர்பாக சமீபத்தில் ஊடகங்களில் எந்த செய்திகளையும் நாங்கள் காணாததால், நிதி மற்றும் மூலதன சந்தைகள் மற்றும் பொது நிறுவன சீர்திருத்தங்கள் துறை அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ராலின் ஊடக பிரிவினை நாம் தொடர்புகொண்டு வினவியபோது, ஏதேனும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்று வினவினோம். அப்போது, ‘’வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை,’’ என தெரிவித்தார்.
நாம் மேற்கொண்ட தேடல் முடிவில் 225 அதி சொகுசு வாகனங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக பகிரப்படும் புகைப்படம் முற்றிலும் இலங்கையுடன் தொடர்புடையது அல்ல என்பது எமது ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தற்போது அமுலில் உள்ள வாகன இறக்குமதி தடை நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:225 அதி சொகுசு வாகனங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதா ?
Fact Check By: Nelson ManiResult: False