INTRO :
50 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் அத்திப் பூ என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Ntamil.com என்ற பேஸ்புக் கணக்கில் ” அத்திப் பூத்தாற் போல...

என்ற வரிகளை ஊரில் கேட்ட ஞாபகம்.

இப்ப தான் அதன் விளக்கம் புரிகின்றது...

“ என கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி (21.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் அத்திப் பூ என்று இணையத்தில் பகிரப்படுகின்ற புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது 2016 ஆம் காலப்பகுதியில் மகாராஷ்டிரா மாநிலம், மிரஜ் நகரின் கோட்டைப் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

அங்குள்ள கோயில் ஒன்றின் அருகே, அத்தி மரத்தில் இப்படி அரிய முறையில் பூத்திருப்பதாக, தகவல் பரவியதை தொடர்ந்து, மக்கள் ஏராளமானோர் குவிந்து, வழிபட்டுள்ளனர்.

பிறகு மேற்கொண்ட ஆய்வில் இது அத்தி பூ அல்ல என கண்டறியப்பட்டுள்ளது.

loksatta.com | Archived link

எமது இந்திய தமிழ் பிரிவினர் தாவரவியல் நிபுணர் ஆறுமுகம் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது, ‘’அத்தி மரத்தில் வெளிப்படையாக பூ என எதுவும் வராது; அதன் பூ என்பது கிட்டத்தட்ட இனப்பெருக்கத்திற்காக பயன்படக்கூடியது மட்டுமே; மூடிய உறையில் பார்ப்பதற்கு காய் போல இருக்கும். இதற்கு Syconium என்று பெயர்.

அதுவே வளர்ந்த பிறகு நாம் உண்கிற அத்திப் பழமாக மாறுகிறது. இது வளர்ந்து வெடிக்கும்போது மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஒருமுறை இந்த காய் வடிவிலான பூ தோன்றும். நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தில் இருப்பது காய்ந்த மரங்களில் வளரக்கூடிய பூஞ்சையாகும். அது பூ அல்ல,’’ என்று தெரிவித்தார்.

அத்தி மரத்தில் எப்படி மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது என்பதை விளக்கும் வரைபடம் கீழே தரப்பட்டுள்ளது.

Diagram  Description automatically generated

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வுக்கு அமைய அத்திப் பூ என்று கூறி இணையத்தில் பகிரப்படும் புகைப்படம் உண்மையில், பூஞ்சை ஒன்றின் படம் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகின்றது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அத்திப் பூ இதுவா?

Fact Check By: Nelson Mani

Result: False