
INTRO :
ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்த அதியமானின் கோயில் இப்போது சரச் ஆகி மாற்றப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Kavin Murugaesh என்ற பேஸ்புக் கணக்கில் ” இந்து சமய அறநிலையத்துறை தூங்குகிறதா ” என கடந்த மாதம் 12 ஆம் திகதி (12.03.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
குறித்த புகைப்படத்தில் நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, NMSI’s Christukula Ashram என்ற ஒரு பேஸ்புக் புகைப்படத்தொகுப்பு கிடைக்கப்பெற்றது.

அதை நாம் ஆய்வு செய்த போது, இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகின்ற அதே கோயில் போன்ற அமைப்பு உடைய ஆச்சிரமம் வர்ணம் தீட்டப்பட்டிருந்த புகைப்படம் எமக்கு தென்ப்பட்டது.

மேலும் குறித்த இரு புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, இரண்டும் ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது கண்டறியப்பட்டது.
கிறிஸ்து குல ஆசிரமம் என்று கூகுள் மேப்பில் தேடிய போது இது தொடர்பான புகைப்படங்களும் நமக்குக் கிடைத்தன
இது தொடர்பாக மேலும் நாம் தேடிய போது, இந்திய சுதேச மிசனெறிச் சங்கம் (The National Missionary Society Of India) என்ற அமைப்பு நடத்தி வருவது தெரிந்தது. அவர்களுக்கு எமது இந்திய தமிழ் பிரிவினர் தொடர்புக்கொண்டு வினவிய போது, நாங்கள் கட்டிய ஆலயம்தான், கோவிலை கிறிஸ்தவ ஆலயமாக மாற்றவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் தென்காசி, திருப்பத்தூர் மட்டுமல்ல இந்தியா முழுக்க நாங்கள் கட்டிய தேவாலயங்கள் எல்லாம் இந்த சாயலில்தான் இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
எமது தேடலுக்கு அமைய, ஔவைக்கு அதியமான் நெல்லிக்கனி தந்த கோவில் கிறிஸ்தவ ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது என பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்த அதியமானின் கோயில் இப்போது கிறிஸ்தவ ஆலயமா?
Fact Check By: Nelson ManiResult: False