
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபல்யமான இயக்குனரும் நடிகருமான சுந்தரராஜன் மரணமடைந்துள்ளதாக பேஸ்புக்கில் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

யாழ் தீவகம் என்ற பேஸ்புக் கணக்கில் ” #ஆழ்ந்த_இரங்கல்
பிரபல திரைப்பட இயக்குனரும் சிறந்த குணசித்திர நடிகருமான #R_சுந்தரராஜன் அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் மரணமடைந்தார்…
அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும். ” என்று மாதம் 28 ஆம் திகதி (28.02.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள முதலில் குறித்த பதிவின் கீழ் பதியப்பட்டிருந்த கமெண்டுக்களை ஆய்வு செய்தோம்.


அதில் அதிகமானோர் குறித்த தகவல் உண்மையென நம்பி அவருக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். அதில் சிலர் குறித்த செய்தி போலியானது என ஆதரங்களுடன் பகிர்ந்திருந்தமை காணக்கிடைத்தது.
குறித்த பேஸ்புக் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே இதுபற்றி சுந்தரராஜன், அவரது மகன் மூலமாக பேஸ்புக்கில் புகைப்படத்துடன் தோன்றி இது வெறும் வதந்திதான் என மறுப்பு தெரிவித்துவிட்டார்.

மேலும் சினிமா செய்திகளை வெளியிடும் இணையத்தளமான Indiaglitz இணையதளம் குறித்த தகவல் போலியானது என்று செய்தி வெளியிட்டிருந்தது.

Indiaglitz Link | Archived Link
மேலும் குறித்த செய்தி போலியானது என்று எமது நிறுவனத்தின் இந்திய தமிழ் பிரிவு மேற்கொண்ட ஆய்வினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், பிரபல திரைப்பட இயக்குனர் சுந்தரராஜன் மரணம் என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்று உறுதியாகிறது.