மண்கும்பானில் மணல் கொள்ளை உழவு இயந்திரம் தீக்கிரையா?

Partly False இலங்கை செய்திகள்

யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களை வழிமறித்த பிரதேச மக்கள் மணல் கடத்தியவர்களின் உழவு இயந்திரங்களை தீயிட்டு கொழுத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link | News link | Archived Link

DelftMedia DM என்ற பேஸ்புக் கணக்கில் ” மண்கும்பானில் மணல் கொள்ளை உழவு இயந்திரம் தீக்கிரை ” என்று கடந்த வருடம் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி (11.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பதிவோடு delftmedia இணையத்தளத்தில் செய்தி லிங்கினையும் இணைத்துள்ளனர்.

Fact Check (உண்மை அறிவோம்) 

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள முதலில் குறித்த செய்தி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

முதலாவது புகைப்படம்

குறித்த புகைப்படமானது 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Bratt என்ற இடம் அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ளது. முழு அறிக்கை

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட சோதனையில், மண்கும்பானில் மணல் அகழ்வில் ஈடுபட்டோரைத் தாக்கியதுடன் இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் 8 பேர் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிஸார் இருவேறு வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தமை உறுதி செய்யப்பட்டது.

News link | Archived Link

மேலும் மேற்கொண்ட சோதனையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஒளிபரப்பப்பட்ட தொலைகாட்சி செய்தியில் வீடியோ எமக்கு கிடைத்தது.

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மண்கும்பானில் மணல் கொள்ளை உழவு இயந்திரம் தீக்கிரை என கூறப்பட்ட வெளியான புகைப்படங்களில் ஒரு உழவு இயந்திரம் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:மண்கும்பானில் மணல் கொள்ளை உழவு இயந்திரம் தீக்கிரையா?

Fact Check By: Nelson Mani 

Result: Partly False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *