INTRO :
முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளரான அஜித் ரோஹன கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

TRAVEL CEYLON என்ற பேஸ்புக் கணக்கில் ” நல்ல மனிதன் ரொம்ப மன வருத்ததிற்குள்ளான புகைப்படம்! கடவுள் ஆசி விரைவில் சுகம் கிடைக்கட்டும் “ என இம் மாதம் 24 ஆம் திகதி (24.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளரான அஜித் ரோஹன கொரோன தொற்றுக்குள்ளாகிய செய்தி நேற்றைய தினம் இலங்கையின் பிரதான ஊடகங்களில் வெளியாகின. Link 1 | Link 2

குறித்த செய்தியின் அடிப்படையில் அஜித் ரோஹன கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர் ஆபத்தான நிலையில் இல்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித் ரோஹனவை ஒத்த முக அமைப்பு உடையவரின் புகைப்படத்தினை பகிர்ந்து, அஜித் ரோஹன தீவிர சிகிச்சையில் உள்ளதாக செய்தியினை பகிர்ந்திருந்தமை எமக்கு சந்தேகத்தினை வெளியிட்டது.

குறித்த புகைப்படத்தினை நாம் ஆய்வுக்கு உட்படுத்திய போது, இதில் உள்ளவர் டிக்டொக் செயளியில் உள்ள tiago.arieiv என்ற நபர் பதிவிட்டிருந்த காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

அந்த வீடியோவில் பதியப்பட்டிருந்த போர்ச்சுகீஸ் வார்த்தையில் (Eu venci o covid 19 Deus fez um milagre na minha vida) நான் கொரோனாவை வென்றேன். கடவுள் என் வாழ்க்கையில் ஒரு அதிசயத்தினை செய்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

@tiago.arieiv

Eu venci o covid 19 Deus fez um milagre na minha vida

♬ som original - Tiago.arieiV

Archived

குறித்த கணக்கில் அவர் பதிவிட்டிருந்த இன்னொரு காணொளியில் இருந்த Unimed என்ற இலட்சினையினை வைத்து ஆய்வு செய்த போது, இது பிரேசில் நாட்டில் அமைந்துள்ள பிரபலமான வைத்தியசாலை என கண்டறியப்பட்டது.

TikTok

குறித்த தேடலின் போது தற்போது அஜித் ரோஹன சிகிச்சை பெறும் இலங்கையில் அமைந்துள்ள Lanka Hospitals என தெரியவந்தது. –

நாம் இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்தில் உள்ளவரையும் அஜித் ரோஹனவையும் ஒப்பிட்ட போது வித்தியாசம் காணப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக அறிக்கையினையும் வெளியிட்டிருந்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வுக்கு அமைய அஜித் ரோஹனா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் காணொளி என பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எமது சிங்களப்பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:அஜித் ரோஹனா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் காணொளியா இது ?

Fact Check By: Nelson Mani

Result: False