கையை துளையிடும் வைரஸ் பூச்சி?

False சமூகம் | Society

ஒரு குறித்த வண்டு இனத்தை தொட்டால் கையில் துளையிட்டு விடும் என்று ஒரு தகவல் பேஸ்புக் பக்கங்களில் பரவி வருகின்றன.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

C:\Users\SGPrabu\Downloads\screenshot-www.facebook.com-2019.12.12-16_36_07.png

Facebook Link | Archived Link 

MMS விளம்பரம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இந்த பூச்சிய பாத்தா கையாள தொடவோ இல்ல அடிக்கவோ வேணாம். இதில இருக்கிற வைரஸ் நம்ம கையில பரவிடுமாம். இது இந்தியால தா நிறைய இருக்கு. இப்ப மழைனால இது இன்னும் அதிகமாக வாய்பிருக்கு. தண்ணீர்ல மிதந்து வரும். அதனால இந்த பூச்சிய பாத்தா அது கிட்ட கூட போக வேணா சேர் பண்னுங்க ” என்று  கடந்த 5 ஆம் திகதி (05.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பதிவில் கையில் துளையிட்ட புகைப்படங்களுடன் ஒரு பூச்சியின் புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் குறித்த புகைப்படத்தின் Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடலுக்கு உட்படுத்தினோம்.

C:\Users\SGPrabu\Downloads\screenshot-www.google.com-2019.12.12-17_37_18.png

Google Search Link

குறித்த தேடலின் போது, குறித்த செய்தி போலியானது என பல உண்மை தன்மையினை கண்டறியும் இணையத்தளங்கள் தமது ஆய்வுகளை செய்துள்ளமை காணக்கிடைத்தது. 

எங்கள் ஃபேக்ட் கிரஸண்டோ இந்திய தமிழ் பிரிவும் குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

குறித்த பரிசோதனையின் போது, இதில் இருப்பது Giant Waterbug என கண்டறியப்பட்டது.

நாம் Giant Water bug என கூகுள் புகைப்படத்தில் தேடிய போது,

C:\Users\SGPrabu\Downloads\screenshot-www.google.com-2019.12.12-23_37_30.png

முட்டைகளுடன் குறித்த உயிரினம் இருக்கும் புகைப்படம் நமக்கு கிடைத்தது,மேலும் மேற்கொண்ட ஆய்வில் மூலம் குறித்த Giant Water Bug என்ற உயிரினம் அதன் பெண் உயிரினத்தினை கவருவதற்காக அது இடும் முட்டைகளை தன்னுடைய முதுகில் சுமக்கும் பூச்சி வகை என்று தெரிந்து. 

ஆண் வண்டின் முதுகு பகுதியில் இருப்பது முட்டைகள் தான். பேஸ்புக்கில் பரவுவதை போன்று அவை வைரஸ் தொற்று இல்லை. மேலும், இந்த வகை வண்டுகள் அபாயமற்றது என்று எமது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அறிய

தொடர்ந்து நாம் மேற்கொண்ட தேடுதலில் மனித கையில் பயங்கர துளை போன்று பகிரப்பட்ட புகைப்படம் 

அது, மெழுகைப் பயன்படுத்தி கையில் வித்தியாசமான தோற்றத்தை செயற்கையாக ஏற்படுத்திய படம் என்று தெரிந்தது. திரைப்படங்களில் இது போன்ற பயங்கரமான தோற்றத்தினை கொண்டுவர இவ்வாறான தோற்றங்களை செயற்கையாக வடிவமைப்பது அனைவரும் அறிந்ததே.

இப்படி, பூச்சிகளால் பாதிக்கப்பட்டது போன்ற கையை உருவாக்குவது எப்படி என்று வீடியோவையே வெளியிட்டு இருந்தனர்.

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், தண்ணீரில் மிதந்து வரும் வண்டை தொட்டாலே கைகளை துளையிட்டு விடும், அது வைரஸ் கொண்ட பூச்சி என்ற ஃபேஸ்புக் பதிவானது போலியானது.

Avatar

Title:கையை துளையிடும் வைரஸ் பூச்சி?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *