
ஈரான் இராணுவ தளபதி ஹாஷிம் சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ என கூறப்பட்டு ஒரு வீடியோ பதிவு ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Mohamed Rishok JP என்ற பேஸ்புக் கணக்கில் ” ஈரான் ராணுவ தளபதி ஹாஷிம் சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ.. என சொல்லப்படுகிறது! ” என்று இம்மாதம் 7 ஆம் திகதி (07.01.2020) அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஈராக்கிலும் சிரியாவிலும் ஈரான் முன்னெடுத்த நடவடிக்கைகளிற்கான தளபதியாக விளங்கிய, அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜெனரல் காசெம் சுலைமானி பக்தாத் விமானநிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த வேளை ஆளில்லா விமானதாக்குதல் உயிரிழந்ததார்.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக பொறுப்பேற்க, அவருக்கு ஈரான் உள்பட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எந்நேரமும் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முழு அறிக்கை
இத்தகைய பரபரப்பான சூழலில் தான், பேஸ்புக்கில் சுலைமானி கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு பகிரப்பட்டுள்ளது. இது, உண்மையில், சுலைமானி கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்டது அல்ல.
இது, வீடியோ கேம் ஒன்றின் காட்சியாகும். 2015ம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டமை தொடர்பான வீடியோ ஈரானிய தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ஈரான் இராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோ என்று பகிரப்பட்ட வீடியோ கேம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Title:ஈரான் இராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய வீடியோவா இது?
Fact Check By: Nelson ManiResult: False