
INTRO :
இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி ரீமா பாயிஸ் என இணையத்தில் ஒரு செய்தி பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Ceylonsri News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமா பாயிஸ் இலங்கையின் “முதல் முஸ்லிம் பெண் விமானியாவார்” முயற்சியில் முதல்கட்டமாக இலண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன் கிளைடிங் கிளப்) இல் இனைந்து ஒரு வருட பயிற்சியை ஆரம்பித்துள்ளார்.
கடந்த கிழமை பறக்கும் விமானத்தில் 10000 அடி உயரத்தில் பரசூட் மூலம் குதித்து தனது சாதனையை ஆரம்பித்த றீமாபாயிஸ் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிறார் நேற்று சிறுவிமானத்தில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்.” என இம் மாதம் 23 ஆம் திகதி (23.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
Google Reverse Image Tool பயன்படுத்தி நாம் குறித்த புகைப்படத்தினை தேடுதலுக்கு உட்படுத்தினோம். அப்பொழுது குறித்த புகைப்படத்தில் உள்ளவர் Anusha Sriratne என்று கண்டறியப்பட்டது.
இவர் இலங்கையில் முதலாவது பெண் விமானி ஆவார். மேலும் இவர் முஸ்லிம் பெண்மணி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பெண் விமானி தொடர்பாக மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள இவர் குறித்து வெளிவந்த செய்தி இணைப்புக்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
குறித்த பதவில் பெயரிடப்பட்டுள்ள றீமா பாயிஸ் பற்றிய விபரத்தினை தேடிய போது, 2016 ஆம் ஆண்டு இணையதளங்களில் பகிரப்பட்ட இரு வீடியோக்கள் எமக்கு கிடைக்கப்பெற்றது.

நாம் அதை ஆய்வு செய்த போது, அதில் shalbournegliding.co.uk என்ற இணைய முகவரி பதியப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. குறித்த இணையதளத்தில் நாம் ஆய்வினை செய்த போது, இது பறக்கும் விமானத்தினை ஒத்த அனுபவத்தினை ?ஓர் நிறுவனம் என கண்டறியப்பட்டது.
2016 ஆம் ஆண்டு வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில் குறித்த பெண் விமான பயிற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் விமான பயணத்தினை ஒத்த அனுபவத்தினை வழங்கும் நிறுவனமாகும்.
குறித்த அனுபவத்தினை பெற்ற நபர் ஒருவர் பதிவேற்றம் செய்துள்ள வீடியோ
குறித்த தகவலுக்கு இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி என வேறு ஒரு பெண்மணியின் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.