
இந்திய தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான தல என்று ரசிகர்களால் பாசமாக அழைக்கப்படும் அஜித்குமார் படப்பிடிப்பு தளத்தில் விபத்திற்கு உள்ளானதாக ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம்.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Tamil Kickass என்ற பேஸ்புக் பக்கத்தில் ” Thala Ajith met with an accident while shooting” என்று இம் மாதம் 19 ஆம் திகதி (19.02.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள முதலில் குறித்த பேஜ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த வீடியோவிலிருந்து ஒரு Screenshot புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

குறித்த தேடலின் போது, இவ் வீடியோவானது 2012 ஆம் ஆண்டு இணையத்தில் முதல் முதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.


அதன் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் அறிமுக விழாவின் போது, பரிசோதனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளை செலுத்தும் வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை தற்போது எடுத்து தல ரசிகர்கள் சிலர் வலிமை படத்தின் போது தல அஜித் விபத்திற்குள்ளாகி இருப்பதாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், தல அஜித் படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்குண்டார் என வெளியான வீடியோ போலியானது.

Title:தல அஜித் படப்பிடிப்புத் தளத்தில் விபத்தில் சிக்குண்டாரா?
Fact Check By: Nelson ManiResult: False