மனித தோற்றத்துடன் பிறந்த பூனை என்ற ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

𝐆𝐮𝐞𝐬𝐭 𝐓𝐫𝐨𝐥𝐥 𝐕𝐚𝐯𝐮𝐧𝐢𝐲𝐚 என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அவன் செய்த வேலயாத்தான் இருக்கும் 🤔

#Guesttrollvavuniya

#TR😎

” என்று ஜுன் மாதம் 11 ஆம் திகதி (11.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பதிவை பலரும் பகிர்ந்துள்ளமை எமக்கு காணக்கிடைத்து.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலை உண்மை தன்மையினை கண்டறிவதற்கு அதிலிருந்த மனித உருவத்திலான பூனை என்ற வர்ணிக்கப்பட்ட புகைப்படத்தினை google reverse image tool ஐ பயன்படுத்தி தேடுதலில் ஈடுப்பட்டோம்.

2017 ஆம் ஆண்டு முதல் குறித்த புகைப்படம் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வந்துள்ளமை காணக்கிடைத்தது. மேலும் இது வதந்தி என்ற தகவலும் எமக்கு குறித்த தேடுதலின் போது கண்டறிய கூடியதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நாம் மேற்கொண்ட தேடுதலின் போது, Laira Maganuco என்ற நபர் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி தனது பேஸ்புக் பக்கத்தில் குறித்த பொம்மையின் ஆரம்பக்கட்ட பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பதிவேற்றம் செய்து குறித்த பொம்மைகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக பதிவேற்றம் செய்துள்ளார்.


Facebook Link | Archived Link

குறித்த பேஸ்புக் பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த baby licantropo என்ற பெயரினை நாம் பெயரினை நாம் Google இல் தேடிய போது பேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படம் எமக்கு காணக்கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

நாம் மேலும் மேற்கொண்ட தேடுதலில் Etsy என்ற இணையத்தளத்தில் குறித்த பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

இதற்கமைய மனித தோற்றத்துடன் பிறந்த பூனை என பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மனித தோற்றத்துடன் பிறந்த பூனை என பகிரப்படும் தகவல் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:மனித தோற்றத்துடன் பிறந்த பூனையா?

Fact Check By: Nelson Mani

Result: False