INTRO :
நடிகர் சூர்யா Go Home Gota என்று ஏந்தியதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Tiktok Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” #💪🏼 #😮 #prayforsrilanka🇱🇰🙏🏻 #SriLanka #trandingvedio #tranding #tiktok #😱 #❤️ @sainathkaarsainat @logoniyinesh @7m0winx @diveks_dk @subas0.7 @sainathkaar @sainathkaar @sainathkaar “ என இம் மாதம் 09 ஆம் திகதி (09.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நடிகர் சூர்யா பதாகை ஏந்தியது குறித்த புகைப்படத்தின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

நமது குழுவினர் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, குறித்த புகைப்படமானது பழையது போன்று எமக்கு தென்பட்டது. இதனை நாம் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலைப் பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த தேடலின் போது 2015 ஆம் ஆண்டு ChennaiGives என்ற நிதியுதவி திரட்டல் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் விதமாக நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி நடிகை ஜோதிக்கா இணைந்திருந்தமைக்காக அவர்கள் வெளியிட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக வெளியான செய்தி அறிக்கையும் எமக்கு கிடைக்கப்பெற்றது. வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | Link 1

நடிகர் சூர்யா 2015 ஆம் ஆண்டு நிதியுதவி திரட்ட வெளியிட்ட பழைய படத்தை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது உறுதியானது. இதன் அடிப்படையில், நடிகர் சூர்யா Go Home Gota என்று பதாகை ஏந்திய புகைப்படம் போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

நடிகர் சூர்யா Go Home Gota என்று பதாகை ஏந்தியதாக பகிரப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:நடிகர் சூர்யா Go Home Gota என்று பதாகை ஏந்தினாரா?

Fact Check By: S G Prabu

Result: Altered