
INTRO :
பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டகாரரான சஹீட் அப்ரிடியின் மகள் மரணித்து விட்டதாக ஒரு புகைப்படம் தொகுப்புடன் ஒரு பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
Lanka Media என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பிரபல கிரிக்கெட் வீரர் #சஹீட்_அஃப்ரிடி அவர்களின் #மகள் இன்று #காலமானார்.” என இம் மாதம் 12 ஆம் திகதி (12.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடியின் மகள் குறித்து பல வருடங்களாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், இலங்கை ப்ரீமியர் லீக் போட்டியில் இருந்து விலகி தனது சொந்த வேலையின் நிமிர்த்தமாக நாடு திரும்பி இருந்த நிலையில் அவரது மகள் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.
இதைத்தொடர்ந்து அப்ரிடி மகள் இறந்துவிட்டார் என்று கூறி பதிவிடப்பட்டுள்ளதால் இது பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
Unfortunately I have a personal emergency to attend to back home. I will return to join back my team at LPL immediately after the situation is handled. All the best.
— Shahid Afridi (@SAfridiOfficial) December 2, 2020
நாம் இணையத்தில் பகிரப்பட்டு வந்த புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வு செய்த போது இது 2016 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
அப்ரிடியின் டுவிட்டர் கணக்கினை நாம் சோதனை செய்த போது, 2016 ஆம் ஆண்டு தனது மகளின் சத்திர சிகிச்சை தொடர்பில் பதிவிட்டிருந்த டுவிட் எமக்கு காணக்கிடைத்தது. அதில் தனது மகள் நலமுடன் உள்ளதாக, தெரிவித்திருந்தார்.
A warm hug from my loving daughter Asmara after her surgery made me feel complete, thanks every1 for remembering her in ur prayers
— Shahid Afridi (@SAfridiOfficial) March 31, 2016
தற்போது பரவி வருகின்ற இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்ரிடி அவரின் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு, தனது மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு தன் மகள் தனது அருகிலேயே இருக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
Happy Birthday meri pyari beti! I'm blessed to have my daughters around me. Thank you Allah for the blessings ♥️ pic.twitter.com/BQRQ7aUG0r
— Shahid Afridi (@SAfridiOfficial) December 6, 2020
இதனை தொடர்ந்து அப்ரிடி மகள் உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் வெளியான தகவலை அப்ரிடி மறுத்துள்ளார் என்றும் தன்னுடைய மகள் ஆரோக்கியமாக உள்ளார் என்றும் அவர் கூறியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை எமது ஆய்வில் கண்டறியப்பட்டது.
நாம் மேற்கொண்ட தேடலில் அப்ரிடி மகள் இறந்துவிட்டார் என்று பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.