INTRO :
சாலையில் அவசரமாக தரையிறங்கிய விமானம் என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Pathmanathan Nathan என்ற பேஸ்புக் கணக்கில் ” Plane's emergency landing on the road...

சாலையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்....” என கடந்த மாதம் 26 ஆம் திகதி (26.02.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இணையத்தில் வைலாக பரவி வருகின்ற குறித்த வீடியோவை பார்க்கும் போது அது Graphics பண்ணப்பட்ட வீடியோ போன்று எமக்கு தோன்றியது,

நாம் அது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, AK Gaming என்ற யூடியுப் அலைவரிசையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோ என கண்டறியப்பட்டது.

மேலும், அது Grand Theft Auto V என்ற கேம்மில் உள்ள ஒரு பகுதியென எமக்கு தெரியவந்தது.

உண்மையான தோற்றத்தினை ஒத்தவாறு வடிவமைக்கப்பட்ட வீடியோ கேமில் உள்ள ஒரு பகுதி வீடியோவினை எடுத்து சமூக வலைத்தளங்களில் சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் என பதிவிட்டு பகிர்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.

எமது இந்திய தமிழ் பிரிவினரும் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டுள்ளமை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:URL Slug: Fact Check–is that British airlines landing in road பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாலையில் தரையிறக்கப்பட்டதா?

Fact Check By: Nelson Mani

Result: False