
INTRO :
ஆயுள்வேத வைத்தியரான தம்மிக்க பண்டார கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாக சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
News Saranteeb என்ற பேஸ்புக் பக்கத்தில் ” අහිංශකයන්ගේ 3000 ට කෙළපු එකා,,මුන්වගේ බොරුකාරයෝஏழை மக்களை ஏமாற்றி 3000 ரூபாய் களை ஏப்பமிட்டவர்
தடுப்பூசி பெற்றுக்கொண்ட கேகாலை வேதமகத்தைய டம்மிக்க பண்டார (பனி மாமா)
நான் கொரோனா தடுப்பு பாணத்தினை தொடர்ந்து செய்வேன், யாராலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது – தம்மிக பண்டார!
கொரோனாவுக்கான நாட்டு மருந்தை கண்டு பிடித்துள்ளதாகவும் அதை பாராளுமன்றத்தில் இருக்கும் அமைச்சர்கள் சகிதம் சென்று அருந்திவிட்டு வந்தார்கள்.
இலங்கையில் இந்த அளவுக்கு முட்டாள்கள் இருப்பது முதல்தவை இல்லை.
மக்களை எமாற்றுவது எனபது இவர்களுக்கு கைவந்த கலை ..
கொரோனாவுகு கூட மருத்ந்து உள்ளது மடமைக்கும் மதவெறியிக்கும் மறுத்து எங்குமமில்லை.” என கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி (18.12.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த தகவலானது பலராலும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
முதலில், நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜ் இனை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் அமெரிக்காவில் இராணுவ தளபதி Isaiah Horton முதலாவதாக கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.
குறித்த புகைப்படத்தில் தம்மிக்க பண்டாரவின் புகைப்படத்தினை photoshop செய்து இணையத்தில் பரப்பி வருகின்றமை கண்டறியப்பட்டது.
எமது தேடலுக்கு அமைய, கொரோனா தடுப்பூசி பெற்ற தம்மிக்க பண்டார என வெளியான புகைப்படமானது போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.