
கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் ஒருவன் ஒரு கிராமம் முழுவதையும் சிலையால் குடியேற்றினான் என ஒரு வீடியோ பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

மலையகம் FM என்ற பேஸ்புக் கணக்கில் ” கல்கத்தாவைச் சேர்ந்த குயவன் ஒருவன் ஒரு கிராமம் முழுவதையும் சிலையால் குடியேற்றினான்.
ஆனால் மூச்சை வைக்க மறந்து விட்டான்…!
பாருங்கள் பகிருங்கள்!! ” என்று கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலை உண்மை தன்மையினை கண்டறிவதற்கு Google Reverse Image Tool பயன்படுத்தி மேற்கொண்ட சோதனையின் போது, இது கல்கத்தாவைச் சேர்ந்த குயவனின் திறமை, என்று கூறி சிலர் யூ டியுபில் தகவல் பகிர்ந்ததைக் கண்டோம். எனினும், இந்த யூடியுப் வீடியோக்கள், 2019ம் ஆண்டில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.

குறித்த வீடியோவின் கீழ் பதியப்பட்டிருந்த கமெண்டுகளை நாம் பார்வையிட்டோம். அதில் பலர் இது கல்கத்தாவில் எங்குள்ளது என வினவியிருந்தமை எமக்கு ஆச்சரியம் அளித்தது.
அதில் ஒரு பயனாளி திஇந்து இணையதளத்தில் வெளியாகிருந்த செய்தி இணைப்பினை இணைத்திருந்தமை காணக்கிடைத்தது. அதை நாம் ஆய்வு செய்தபோது, இது இந்தியாவில் கர்நாடகாவில் உள்ள அருங்காட்சியகம் தொடர்பாக வெளியாகிருந்தது.


மேலும் குறித்த யுடியூப் அலைவரிசையிலும் சிலர் இது கர்நாடகாவில் உள்ள மியூசியம் என குறிப்பிட்டிருந்தனர்.

ஒருவேளை கர்நாடகாவில் இதுபோல கிராம ஜீவன் அருங்காட்சியம் ஏதேனும் உள்ளதா என்று தேடியபோது, Mahatma Gandhi Institute of Rural Energy & Development என்ற பெயரில் ஒன்று உள்ளதாக, விவரம் கிடைத்தது.
எனினும், அது நாம் ஆய்வு செய்யும் வீடியோ காட்சிகளுடன் சற்று முரண்பட்டதாகவே இருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமஜீவன் அருங்காட்சியகம் தொடர்பான காட்சிகளே பொருத்தமாக இருந்தன. அது, மிகப்பெரிய பரப்பளவில் அமைந்திருப்பதால், அதுபற்றிய முழு வீடியோ மிகக் குறைவாகவே காண கிடைத்தன.
நாம் மேலும் மேற்கொண்ட ஆய்வின் போது, குறித்த யுடியூப் வீடியோவின் கீழ் ஒருவர் கேள்விக்கு பதிலளித்த நபர் ஒருவர் இது Siddhagiri Gramjivan Museum (#Kaneri Math) at Kaneri, Kolhapur district, Maharashtra எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இது கொல்கத்தாவைச் சேர்ந்தது இல்லை, மகாராஷ்டிரா தொடர்பானது என்று தெரியவருகிறது.

நாமும் குறிப்பிட்ட இடம் பற்றி தகவல் தேடினோம். இது, மகாத்மா காந்தியின் கனவான கிராம ராஜ்யத்தை அடிப்படைக் கருவாக வைத்து, கிராம மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைக் காட்சிப்படுத்தக்கூடிய அருங்காட்சியகம் என்ற விவரம் கிடைத்தது.
Siddhagiri Gramjivan Museum Link 1 I Siddhagiri Gramjivan Museum Link 2
இதற்கமைய மேற்கண்ட கொல்கத்தாவில் இல்லாத ஒரு அருங்காட்சியகத்தின் காட்சியை எடுத்து, குயவன் ஒருவனின் கைவண்ணம், என்று கூறி தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.
எமது இந்திய தமிழ் பிரிவின் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் கொல்கத்தாவில் உள்ள மியூசியம் வேறு, நாம் ஆய்வு செய்யும் வீடியோவில் உள்ள மியூசியம் வேறு என்று நிரூபித்துள்ளோம்.