INTRO :
இமயமலையில் 4 வருடத்துக்கு ஒரு முறை பெண் போலவே பூக்கின்ற நாரிலதா மலர் என சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” 4 வருசத்துக்கு ஒருமுறை பெண் போலவே பூக்கின்ற இந்த பூ இமயமலையில் உள்ளது இதன் பெயர் நாரிலதா மலர் “ என இம் மாதம் 17 ஆம் திகதி (17.05.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இந்தியர்களால் நாரிலதா என்றும் இலங்கையர்களால் லியதம்பர என்றும் நாரிலதா என்றும் அழைக்கப்படும் இந்த கற்பனை மலர் தாய்லாந்தில் Nariphon , Makkaliphon அறியப்படுகிறது.

புத்த மதத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது. நாரிஃபோன் என்ற பெயரில் (பாலி மொழியில் நாரிபழா) ஹிமாஃபன் எனும் வனத்தில் அரிய வகை மரம் உள்ளதாகவும், அதில் பெண்களைப் போலவே உருவம் கொண்ட பூக்கள் பூப்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இதில் வரும் ஹிமாஃபன் எனும் வனம் கற்பனையானது. அது கந்தர்வர்களுக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது. புத்தமதத்தை பரப்பும் போதிசத்துவர்கள் தியானம் செய்யும் பகுதியில் அவர்களின் மனதை குழப்பும் நோக்கில் இந்திரன் இதுபோன்ற மரங்களை நடுவது வழக்கம் என்றும், அந்த கதையில் கூறப்படுகிறது.

Nariphon/Nariphala

எனவே, புத்த மதத்தில் கற்பனையாகச் சொல்லப்படும் ஒரு கதையில் வரும் நாரிபழா என்ற மரத்தின் பெயரை நாரிலதா என்றும், ஹிமாபன் என்ற வனத்தின் பெயரை ஹிமாலயா (இமயமலை) என்றும் பெயர் மாற்றி, பலரும் வதந்தி பரப்பி வருகின்றனர் என்று தெளிவாகிறது.

ஒன்இந்தியா ஹிந்தி என்ற இணையத்தளத்தின் உத்தியோகப்பூர்வ யூடியுப் தளத்தில் இது போலியானது என்பதற்கான ஆதாரத்துடன் வெளியிட்டிருந்த வீடியோவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

எங்களின் மேலதிக விசாரணையில், ஒரு செடியின் வளர்ச்சியின் போது அதன் பழத்தின் வடிவத்தை செயற்கையாக மாற்ற பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட அச்சுகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட பல நிகழ்வுகள் தெரியவந்தது. அத்தகைய அச்சுகளால் செய்யப்பட்ட சில வடிவமைப்புகள் கீழே உள்ளன.

Link

மேலும் இணையத்தில் பகிரப்படுகின்ற குறித்த புகைப்படங்களை நன்கு அவதானித்த போது, அதில் வெவ்வேறு விதமான வடிவமைப்பில் பெண் உருவம் காணப்பட்டமை கண்டறியப்பட்டது.

நமக்கு தேடலின் போது, உலர்ந்து போன நாரிலதா பழங்களின் புகைப்படங்கள் சில கிடைக்கப்பெற்றன அதில் பெண்களின் கைகள் இரு புறமும் வைக்கப்பட்டதை போன்று அமைந்திருந்தமை காணக்கிடைத்தது. ஆனால் இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்தில் பல விதமான போஸ்களில் குறித்த பழங்கள் காணப்பட்டது.

இது தொடர்பாக மேலும் நமது குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் போது, தாய்லாந்து நாட்டில் Himmaphan Forest இல் fiberglass இனால் உருவாக்கப்பட்ட போலியான உருவ பொம்மைகளே இது என குறித்த வனாந்திரத்திற்கு பொறுப்பாளரான Bancha Mahasaen தெரிவித்துள்ளார்.

postjung | thaiza.com | clipmass.com

இமயமலையில் 4 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் நாரிலதா பூ என பகிரப்படும் செய்தி போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நமது சிங்கள பிரிவினர் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இமயமலையில் 4 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் நாரிலதா பூ- உண்மையா?

Fact Check By: S G Prabu

Result: False