
கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க ஒரு வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் கொரோனா வைரஸிலிருந்து தப்பித்து விடலாம் என்று ஒரு செய்தி பரவுவதை நாம் காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Muslim Voice – முஸ்லிம் வொய்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கோரனா வைரஸ் தாக்கிவிட்டதா?
1 வெங்காயத்தை பச்சையாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி பதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு ஊட்டிவிடுங்கள் 5 நிமிடம் தண்ணீர் குடிக்கவிடக்கூடாது.
5/= ரூபாய் செலவில் 5 நிமிடத்தில் குணமாகிவிடும். 15 நிமிடத்தில் பரிசோதித்து பாருங்கள் 1% மும் அந்த வைரஸ் இருக்காது” என்று இம்மாதம் 5 ஆம் திகதி (05.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில், நாம் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பதிவாளரான டாக்டர். ஆஷன் பதிரனவை தொடர்பு கொண்டு வினவியபோது, குறித்த செய்தி தவறானது, என்று தெரிவித்தார்.
மேலும் குறித்த சிகிச்சை முறையினை நிரூபிக்க எவ்வித விஞ்ஞான ரீதியான சான்றுகள் அல்லது ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பு இணையத்தளத்தில் நாம் கொரோனா வைரஸிலிருந்து மீள்வதற்கு ஏதும் மருந்துகள் அல்லது வைத்திய முறைகள் உள்ளதா என்று மேற்கொண்ட தேடுதலில்,
குறித்த திகதிக்கு எவ்வித மருந்து வகைகளோ அல்லது வைத்திய முறையோ இல்லை என்று தெளிவாக உலக சுகாதார அமைப்பானது தெரிவித்திருந்தது.

மேலும் இதுகுறித்து எமது இந்திய கிளையின் ஆங்கில பிரிவானது மேற்கொண்ட ஆய்வில் குறித்த தகவல் போலியானது என்று நிரூபித்துள்ளது.
குறித்த செய்தியினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கொரோனா வைரஸை ஒரு வெங்காயத்தினால் விரட்டலாம் என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்று உறுதியாகிறது.