
INTRO :
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியிலிருந்து பால் போக்போ விலகியதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Leo News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macronயின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கையினால் France கால்பந்தாட்ட அணியின் தலைவரும் கடந்த வருடம் France உலக கோப்பையை சுவீகரிப்பதற்கு முக்கிய வீரராகவும் செயல்பட்ட Paul Pogba France கால்பந்தாட்ட அணியில் இருந்து விலகியுள்ளார் வாழ்த்துக்கள்…
By: அமீர் கான் ” என ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி (28.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதனை பலரும் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் முதலில் பால் போக்பா அவர்களின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களை ஆய்வு செய்தோம்.அத்தேடலின் விளைவாக பேஸ்புக்கில் பகிரப்படும் குறித்த விடயம் தொடர்பாக அவர் அதில் பதிவிட்டுள்ளமை எமக்கு கிடைக்கப்பெற்றது.
இவரின் அனைத்து சமூகவலைத்தளங்களிலும் த சன் என்ற இணைத்தளத்தில் வெளியாகி இருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியிலிருந்து பால் போக்போ விலகியதான செய்தி முற்றிலும் போலியானது என பதிவிட்டுள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

Instagram Link | Archived Link
— Paul Pogba (@paulpogba) October 26, 2020
கடந்த மாதம் நடந்த தேசிய போட்டியில் பிரான்ஸ் மற்றும் சுவீடன் அணிகள் மோதின குறித்த போட்டியில் பால் போக்போவும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாம் மேற்கொண்ட தேடலில் பிரான்சில் கால்பந்தாட்ட வீரர் பிரான்ஸ் அணியில் இருந்து விலகினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியிலிருந்து பால் போக்போ விலகினாரா?
Fact Check By: Nelson ManiResult: False