
INTRO :
இலங்கை பொலிஸாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அல்லாத உங்களுக்கு அன்பான வேண்டுகோள் என ஒரு அறிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Pragash Balachandran என்ற பேஸ்புக் கணக்கில் “ இலங்கை பொலிஸாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அல்லாத உங்களுக்கு அன்பான வேண்டுகோள்” என கடந்த மாதம் 06 ஆம் திகதி (06.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இது குறித்து இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன ஊடக சந்திப்பு ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நடத்தியுள்ளார்.
அதில் இது முற்றிலும் போலியான தகவல் என்றும் இதனை பரப்பியவர்கள் தொடர்பில் இலங்கை க்ரைம் பொலிஸ் பிரிவினர் விசாரனைகள் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது போன்று கடந்த வருடமும் கொரோனா பி.எச் அளவு பற்றி ஐ.டி.எச் மருத்துவமனை ஆலோசனை என்று பி.எச் அளவுகளுடன் இதே பதிவு சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.
அது குறித்தான ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய இலங்கை பொலிஸால் கொரோனா PH தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளதாக பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலங்கை பொலிஸால் கொரோனா PH தொடர்பில் அறிக்கை வெளியிட்டதா?
Fact Check By: Nelson ManiResult: False