கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அழுத தாய்லாந்து சுகாதார அமைச்சர்; உண்மை என்ன?

False சர்வதேசம் | International

INTRO :
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தாய்லாந்து சுகாதார அமைச்சர் அழுததாக ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

 Ossan Salam Mohammed  என்ற பேஸ்புக் கணக்கில் ” ஐயையோ! சீனி மிட்டாய் டொபி கேட்டு அடம்பிடிக்கும் ஒரு அமைச்சர் !

அதாவது தனக்கு அவற்றைத் தந்தால் தான் ஊசி போட்டுக் கொள்வதாக சொல்கின்றாரோ இந்த பாப்பா அமைச்சர் !!

அதாவது தாய்லாந்து நாட்டின் சுகாதார அமைச்சர் தடுப்பூசி போட வந்த வேளையில் டாக்டர்கள் தடுப்பூசி போட முனைந்து போது அதனைத் தடுக்க படாத பாடும் அமைச்சர் அழுது புலம்பும் காட்சியே இது!.. நமது நாட்டில் ஐந்து வயதுப் பாப்பாவும் இப்படித் தான் ஊசி போடவிடாமல் அழுது புலம்புவான்! நமக்கும் சின்ன வயதில் இந்த அனுபவம் உண்டு.!  

அந்த பரிதாபம் தாய்லாந்தின் சுகாதாரத் துறை..!!”  என கடந்த மாதம் 31 ஆம் திகதி  (31.02.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த வீடியோ  பலராலும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலில் நாம் குறித்த வீடியோவில் இருந்து ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து Yandex Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, எமக்கு சீனாவை சேர்ந்த நபர் தனது முதலாவது தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பயந்த வீடியோ என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

மேலும், நாம் Chinese man scared of his first ever injection என்ற வார்த்தையினை யூடியுப் தளத்தில் தேடிய போது, எமக்கு 2018 ஆம் ஆண்டு South China Morning Post என்ற யூடியுப் தளத்தில் குறித்த வீடியோ அதே தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

நாம் மேற்கொண்ட தேடலின் போது, கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, அழுத தாய்லாந்து சுகாதார அமைச்சர் என பகிரப்பட்ட வீடியோ 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும், அதில் உள்ள நபர் தாய்லாந்து சுகாதார அமைச்சர் அல்ல, சீனாவை சேர்ந்த சாதாரண நபர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அழுத தாய்லாந்து சுகாதார அமைச்சர் என பகிரப்படும் வீடியோ தவறானது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அழுத தாய்லாந்து சுகாதார அமைச்சர்; உண்மை என்ன?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *