கொரோனா தாக்கத்தினால் இறந்தவர்களை நடுக்கடலில் வீசியதா மெக்சிக்கோ நாடு?

Coronavirus False சர்வதேசம் | International

கொரோனா தாக்கத்தினால் இறந்தவர்களை நடுக்கடலில் வீசும் மெக்சிக்கோ நாடு என்ற ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது. 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 

Lucky Suresh என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா தாக்கத்தினால் இறந்தவர்களை நடுக்கடலில் வீசும் மெக்சிக்கோ நாடு” என்று இம் மாதம் 21 ஆம் திகதி (21.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த காணொளியின் ஒரு screenshot ஐ பயன்படுத்தி Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடுதலுக்கு உட்படுத்தினோம். அதில் எவ்விதமான ஆதரங்களும் எமக்கு கிடைக்கவில்லை. 

மேலும் குறித்த புகைப்படத்தினை Yandex இணையத்தளத்தில் உட்புகுத்தி தேடிய வேளையில், Skydiving off the largest helicopter in use today, the Mi-26 என்ற தலைப்பில் 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திகதி imgur.com என்ற தளத்தில் குறித்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Imgur link | Archived Link 

மேலும் நாம் மேற்கொண்ட சோதனையில் VK.com என்ற இணையத்தளத்திலும் கடந்த 2018 ஆம் ஆண்டு குறித்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது காணக்கிடைத்தது.

Vk.com | Archived Link 

பேஸ்புக்கில் lucky suresh என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோவையும் நாம் imgur என்ற இணையத்தளத்தில் 2018 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த வீடியோவையும் பரிசோதனை செய்த வேளையில் குறித்த இரு வீடியோவும் ஒரே வீடியோ என்று கண்டறியப்பட்டது.

நாம் மேலும் மேற்கொண்ட சோதனையில் ரஷ்யாவை சேர்ந்த AEROGRAD  என்ற SKYDIVING பயிலும் நிறுவனத்தின் AEROGRAD KOLOMNA என்ற யுடியூப் அலைவரிசையில் சோதனை செய்த போது, 2018 ஜூலை 23 ஆம் திகதி ” Рекорд России Мира в классе большие формации 2018 д7” என்ற தலைப்பில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த வீயோவை நாம் ஆய்வு செய்தவேளை பேஸ்புக்கில் பகிரப்படும் வீடியோவும் இதுவும் ஒன்று என்பது உறுதி செய்யப்பட்டது.

ரஷ்யாவில் SKYDIVING உலக சாதனை முயற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை கொரோனாவுடன் ஒப்பிட்டு தவறான தகவலை மக்களுக்கு வழங்க முற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இதற்கமைய கொரோனா தாக்கத்தினால் இறந்தவர்களை நடுக்கடலில் வீசும் மெக்சிக்கோ நாடு என தெரவித்ததாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட வீடியோ போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் கொரோனா தாக்கத்தினால் இறந்தவர்களை நடுக்கடலில் வீசும் மெக்சிக்கோ நாடு என்று கூறி பகிரப்பட்ட வீடியோ போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:கொரோனா தாக்கத்தினால் இறந்தவர்களை நடுக்கடலில் வீசியதா மெக்சிக்கோ நாடு?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *