’கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் யுனிசெப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக சிலர் தகவல்களை பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

அரியாலை இணையம் என்ற பேஸ்புக் கணக்கில் ” கொரோனா வைரஸ்..!

கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம் கொண்ட பெரிய அளவில் உள்ளது. எந்த முகமூடியும் (Mask) அதன் நுழைவைத் தடுத்து விடும். அதனால் சாதாரண முகமூடியையே பயன்படுத்தலாம்.

வைரஸ் காற்றில் கலப்பதில்லை. அதனால் கொரோனா காற்றின் மூலம் பரவுவது இல்லை.

ஆனால் தரையில் படியும். அதனால் நம் வீட்டு அலுவலக தரைகளை அவ்வப்போது சுத்தமாக துடைப்பது நலம்.

கொரோனா வைரஸ் ஒரு உலோக மேற்பரப்பில் விழும்போது, ​​12 மணி நேரம் வாழும். எனவே சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுங்கள்.

கொரோனா வைரஸ் துணிகளில் படியும் போது 9 மணி நேரம் இருக்கும். எனவே துணிகளை துவைப்பதும் அவற்றை இரண்டு மணி நேரம் வெயிலில் காய வைப்பதும் போதுமானது.

வைரஸ் நம் கைகளில் பட்டால் 10 நிமிடங்கள் உயிரோடு இருக்கும். எனவே ஆல்கஹால் சானிட்டீசரை பாக்கெட்டில் வைத்திருப்பது நல்லது.

கொரோனா வைரஸ் 26-27 ° C வெப்பநிலையில் வெளிப் பட்டால் அது கொல்லப்படும். அது வெப்பமான பகுதிகளில் உயிர் வாழாது.

சூடான நீரை அவ்வப்போது பருகுவது நல்லது.

ஐஸ்கிரீம் மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுகளையும் தவிருங்கள்.

வெதுவெதுப்பான உப்பு நீரால் நீர் தொண்டையில் படுமாறு அடிக்கடி கொப்பளியுங்கள் (Gargle).

கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் தடுக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது போதுமானது.

~யுனிசெப்ஃ~ ” என்று இம்மாதம் 4 ஆம் திகதி (04.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில், குறித்த தகவல்கள் முதலில் ஆங்கில பதிப்பில் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகளில் பலராலும் பரப்பப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. குறித்த தகவலினை தமிழில் மொழியாக்கம் செய்து தற்போது அதை பகிர ஆரம்பித்துள்ளனர்.

குறித்த யுனிசெப் செய்தி வதந்தியென்று எமது இலங்கையின் ஆங்கிலப்பிரிவும் இந்தியாவில் உள்ள தமிழ் பிரிவும் ஏற்கனவே ஆய்வினை மேற்கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இரு செய்தியினையும் வாசிக்க கீழே உள்ள லிங்க்கினை கிளிக் செய்யுங்கள்

Fact Crescendo Srilanka News Link

Fact Crescendo indian tamil News Link

யுனிசெப்பின் இலங்கை பேஸ்புக் பக்கத்தினால் கொரோனா வைரஸ் தொடர்பாக வாட்ஸ் எப்பில் பரப்பப்படும் தகவல் உண்மையில்லை என செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

UNICEF Sri Lanka | Archived Link

மேலும் நாம் குறித்த செய்தி போலியானது என்று யுனிசெப் நிறுவனம் அவர்களின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் செய்தினை வெளியிட்டுள்ளனர்.

UNICEF Twitter Link | Archived Link

மேலும் கொரோனா வைரஸ் தொடர்பாக யுனிசெப் நிறுவனத்தினால் உண்மையாக வெளியிடப்பட்டுள்ள தகவலை வாசிக்க தரப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

UNICEF Advisory on Coronavirus | Archived Link

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கொரோனா வைரஸ் பற்றி யுனிசெப் முன்னெச்சரிக்கை வழிமுறைகள் என பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

Avatar

Title:கொரோனா வைரஸ் பற்றி யுனிசெப் முன்னெச்சரிக்கை- உண்மையா?

Fact Check By: Nelson Mani

Result: False