INTRO :

INTETSCHOOL எனும் பெயரில் ஒரு வாட்ஸ் அப் குழு உருவாகியுள்ளதாகவும் இது ISIS தீவிரவாத அமைப்புடன் சம்பந்தப்பட்ட குழுவென ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook link | Archived link

INTETSCHOOL👆👆👆 எனும் பெயரில் whatsup group ஒன்று உருவாகி உள்ளது. அதில் உங்களை சேர்த்து கொள்ள அழைத்தால் அதனை தவிர்த்து கொள்ளவும். அந்த குரூப் ISIS சம்பந்தபட்ட ஒரு குரூப் பதிவாகவும் அந்த குரூபில் சேர்த்தால் உங்களால் விலக முடியாது. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இதை share செய்யவும்...” என கடந்த 26 ஆம் திகதி (26.09.2021) முதல் வாட்ஸ்அப் மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இது உண்மையென நம்பி பலரும் இதனை பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

JOIN US WHATSAPP TELEGRAME AND FACEBOOK – ITI Jobs & Apprentice

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் இணையம் மற்றும் வாட்ஸ்அப் இல் பகிரும் குறித்த செய்தியை அவதானித்த போது, அதில் குறித்த வாட்ஸ் அப் குழுவில் நாம் இணைந்தால் அதில் இருந்து எம்மால் வெளியேற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.

இதனை நாம் வாட்ஸ்அப் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் கேள்விக்கான பதில் பக்கத்தினை நாம் ஆய்வு செய்தபோது, அதில் நாம் இணையும் எந்த குழுவிலிருந்து எந்நேரத்திலும் நாம் வெளியேற முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Graphical user interface, text, application, email  Description automatically generated

Faq.whatsapp

அதற்கமைய பகிரப்படும் குறித்த தகவலில் எவ்விதமான உண்மையும் இல்லை என்பது உறுதியாகின்றது.

எவ்வாறாயினும், இது குறித்து இலங்கை கணினி மன்றத்திடம் (SL CERT) நாங்கள் விசாரித்தோம், அவர்கள் அத்தகைய குழுக்களில் சேரும் போது அல்லது வெளியேறும் போது குழுவின் நிர்வாகி (Group Admin) உங்களை அக்குழுவிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முடியாது என்று அவர்கள் கூறினர்.

மேலும், சில நபர்கள் இத்தகைய பதிவுகளை பார்த்த பிறகு, அவர்கள் போலியான புதிய குழுக்களை அமைத்து மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தினை உருவாக்க முயற்சிக்கவும் வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் உங்களுக்கு தெரியாத நபர்களால், நீங்கள் புதிய குழுக்களில் இணைக்கப்பட்டாலோ அல்லது புதிய நபர்கள் உங்கள் குழுவில் நீங்கள் இணைந்தாலோ உங்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ஆவணங்களை பகிர்வதினை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

குறித்த செய்தி பல நாடுகளிலும் பகிரப்பட்டுள்ளதோடு, இது குறித்து பல உண்மை சோதனை செய்யும் நிறுவனங்களும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளமை காணக்கிடைத்தது.

hoaxorfact.com | blackdotresearch.sg | syyhoaxanalyzer.com | snopes.com

மேலும் இதனுடன் பகிரப்படும் ஒரு கடிதம் குறித்து நாம் பொலிஸ் ஊடகப்பிரிவினரை தொடர்புகொண்டு வினவிய போது, இது பொலிஸ் தரப்பினுள் பகிரப்படும் கடிதங்கள் எனவும், குறித்த தகவல் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கக்கூறி பகிரப்பட்டு உள்ளதாக கடிதத்தின் பிரதியொன்று மக்கள் மத்தியில் பகிரப்பட்டமையால், மக்கள் அதனை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், INTETSCHOOL எனும் பெயரில் ஒரு வாட்ஸ் அப் குழு என பரவும் செய்தி முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும்

வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:INTETSCHOOL எனும் பெயரில் ஒரு வாட்ஸ் அப் குழு என பரவும் செய்தி உண்மையா?

Fact Check By: S G Prabu

Result: False