
INTRO :
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாக பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைக்கின்றது.
இந்நிலையில் 18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக கொரோனாவை எதிர்த்து போராடி வெற்றி கண்ட குழந்தை என ஒரு செய்தி பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Life News- தமிழ் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பூரண குணமடைந்து வீடு செல்லும் குழந்தையை வரவேற்கும் தாய்… ❤️” என இம் மாதம் 26 ஆம் திகதி (26.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
எமது குழுவினர் குறித்த புகைப்படத்தினை Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
அந்த தேடலின் போது deshrupantor.com என்ற இணையதள செய்தியில் குறித்த சிறுமி உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்ற நிலையில் வீடு திரும்புவதாகவும் செய்தி கிடைத்தது.
மேலும், இந்த சிறுமியின் பெற்றோர் மும்பையில் வேலை செய்து வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான உ.பி மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி (13.05.2020) சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. ஆனால், பெற்றோருக்கு கொரோனா தொற்று இல்லை.
இதனால், குழந்தையை தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இரண்டு வயது சிறுமியை தனிமையாக வைத்திருப்பது இயலாத காரியம் என்பதால், உயர் அதிகாரிகளுடன் பேசி, குழந்தையின் தாயும் உடன் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மருத்துவமனையில் தாயும் குழந்தையும் இருந்துள்ளனர். 14 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு கொரோனா நெக்டிவ் என்று வந்துள்ளது. தாய்க்கும் கொரோனா தொற்று இல்லை. எனவே, அவரை வீட்டுக்கு அனுப்பியதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

deshrupantor.com | Archived link
குறித்த செய்தி இணையதளம் Gorakhpur Newsline.com என்ற செய்தி இணையத்தளம் மூலம் குறித்த செய்தி கிடைக்கப்பெற்றது என பதிவேற்றம் செய்திருந்தனர்.
மேலும், எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது, சித்தார்த்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறித்த சிறுமியின் புகைப்படத்தினை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
A nice gesture by a health personnel in COVID hospital in siddharthnagar to a child who is corona positive.@74_alok @UPGovt @CMOfficeUP @InfoDeptUP pic.twitter.com/VoNB2DHniD
— DM Siddharthnagar (@dmsid1) May 22, 2020
அதில் குறித்த குழந்தையிற்கு பரிசளிக்கும் புகைப்படம் மே மாதம் 23 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, அவர் ஜூன் 3 ஆம் திகதி சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என பதிவேற்றம் செய்துள்ளார்.
எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய இந்த சிறுமி தனியாக சிகிச்சை பெறவில்லை, தாய் குழந்தையுடன் இருக்க அனுமதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:18 நாட்கள் குடும்பம் இல்லாமல் தனியாக சிகிச்சை பெற்ற குழந்தை – உண்மை என்ன?
Fact Check By: Nelson ManiResult: False