
INTRO :
நிபா வைரஸ் பாதித்த வாழைப் பழத்தைச் சாப்பிட்ட குடும்பம் உயிரிழப்பு என்று ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

யாழ் தீவகம் என்ற பேஸ்புக் கணக்கில் ” வாழைப்பழம் சாப்பிடும் பொது கவனித்துக்கு …. வாவால் மூலம் நிப்போ ண்ட வைரஸ் பரவி வருது இந்த நோய் ஏற்பட்டால் கண்டிப்பா மரணம் தான் முடிந்த அளவு பார்த்து சாப்பிடுங்க முடியும் வரை #ஷேர் பண்ணுங்க” என இம் மாதம் 19 ஆம் திகதி (19.03.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த புகைப்படத்தில் மரணமடைந்துள்ள குடும்ப புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, 2017 ஆம் ஆண்டு கடன் தொல்லையால் தற்கொலை செய்துக்கொண்ட குடும்பம் என்று தெரியவந்தது.
தெலுங்கானா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஆறு பேர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

deccanherald.com | Archived Link
இதன் மூலம் இவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டதால் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் இல்லை என்பது உறுதியானது.
எமது தேடலுக்கு அமைய, நிபா வைரஸ் பாதித்த வாழைப் பழத்தைச் சாப்பிட்ட குடும்பம் உயிரிழப்பு என பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:நிபா வைரஸ் பாதித்த வாழைப் பழத்தைச் சாப்பிட்ட குடும்பம் உயிரிழப்பா?
Fact Check By: Nelson ManiResult: False